அவரோட பேட்டில் அடிச்சேன்.. என்னோட அதிரடிக்கு பலரும் கிண்டல் பண்ண அது தான் காரணம்.. அபிஷேக் பேட்டி

அவரோட பேட்டில் அடிச்சேன்.. என்னோட அதிரடிக்கு பலரும் கிண்டல் பண்ண அது தான் காரணம்.. அபிஷேக் பேட்டி


ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல்  டி20 போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில்  இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்த  இந்தியா 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ஜூலை ஏழாம் தேதி ஹராரே நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  இந்தியா 235 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 100, ரிங்கு சிங் 48*, ருதுராஜ் கெய்க்வாட் 77* ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ஜிம்பாப்வே அதிரடியாக விளையாட முடியாமல் 18.4 ஓவரில் 134 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக வேஸ்லே 43 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதனால் தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்த  இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த ஐபிஎல் தொடரில் 42 சிக்ஸர்கள் அடித்து நொறுக்கி ஹைதராபாத் அணியில் சிறப்பாக செயல்பட்டதால் இத்தொடரில் தேர்வான அவர் முதல் போட்டியிலேயே டக் அவுட்டானார். 

அப்போது இவரெல்லாம் ஐபிஎல் தொடரில் மட்டுமே அடிப்பார் சர்வதேச கிரிக்கெட்டின் தரம் பற்றி தெரியாது என்று பலரும் கிண்டலடித்தனர். ஆனால் 2வது போட்டியில் ஜிம்பாப்வே அணியை அடித்து நொறுக்கிய அவர் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து சாதனை படைத்தார். குறிப்பாக 82 ரன்களில் இருந்த போது ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் தைரியமாக சதத்தை தொட்டது அனைவரது பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் தம்முடைய அதிரடி ஆட்டத்திற்கு பலரும் கிண்டலடித்த ஐபிஎல் தான் முக்கிய காரணமாக இருப்பதாக அபிஷேக் சர்மா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதில் ஐபிஎல் மிகப்பெரிய வேலை செய்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் அங்கு விளையாடியதால் ஒரு இளம் வீரராக அறிமுக வீரராக நாட்டுக்காக இங்கே விளையாடும் போது நாங்கள் அதிகமான அழுத்தத்தை உணர்வதில்லை”

“உங்களுடைய நாட்டுக்காக விளையாடுவது எப்போதுமே உத்வேகேமாக இருக்கும். துரதிஷ்டவசமாக முதல் போட்டி எங்களுக்கு நன்றாக அமையவில்லை. ஆனால் எங்களிடம் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மாறவில்லை.  டி20 என்பதே அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பொறுத்தது. அது என்னுடைய முதல் நாளாக இருந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன். இப்போட்டியில் சுப்மன் கில் பேட்டை பயன்படுத்தி அடித்தேன். அந்த பேட்டுக்கு நன்றி. இது 12 வயது முதல் நடந்து வருகிறது. நான் அழுத்தமாக உணரும் போதெல்லாம் அவரிடம் பேட் கேட்பேன்.” என்று கூறினார்.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post