இனி மொபைல் நெட்வொர்க்கை மாற்றுவது சுலபம் கிடையாது... டிராய் வைத்த செக்

இனி மொபைல் நெட்வொர்க்கை மாற்றுவது சுலபம் கிடையாது... டிராய் வைத்த செக்


ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் நோக்கத்துடன் MNP விதிமுறைகளை மாற்ற தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அதனை மாற்றியுள்ளது.

பொதுவாக மொபைல் எண்ணை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவது என்பது மிகவும் சுலபமாகவே இருந்தது.

இந்நிலையில் MNP என்ற வசதியை பயன்படுத்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காகவே தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விதிகளை மாற்றியுள்ளது.

சிம் கார்டு தொலைந்து போனாலோ, புதிய சிம் கார்டு மாற்றினாலோ உடனடியாக வேறு நெட்வொர்க்கிற்கு மாற்ற முடியாது. குறிப்பிட்ட காலம் காத்திருந்து தான் எம்.என்.பி. ஆப்ஷனை பயன்படுத்த முடியும்.

அதாவது, இப்போது நெட்வொர்க் மாறுவதற்கான UPC எண் உடனடியாக ஒதுக்கப்படுகிறது. குறித்த எண்ணை நெட்வொர்க்கை மாற்ற நினைக்கும் நபர், தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் கொடுத்து அதே எண்ணில் புதிய சிம் கார்டு வாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் இவை மாறுவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் ஆகும் என்றும் நெட்வொர்க் மாறுவதற்கான கோரிக்கை வந்தவுடனேயே UPC எண் ஒதுக்கப்படக்கூடாது என்று உத்தரவும் கொடுத்துள்ளது.

சில நிறுவனங்கள் இந்த புதிய விதிமுறைக்கு ஒப்புக்கொண்டால், சில நிறுவனம் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது அதிகமாக இருப்பதாக கூறுகின்றது.

இதனை 7 நாட்களாக குறைக்கலாம் என்று சில நிறுவனமும், சில நிறுவனங்கள் 2லிருந்து 4 நாட்களுக்குள் கிடைக்குமாறு செய்யலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

சில சிம் கார்டுகளை மோசடிக்காரர்கள் தவறான நடவடிக்கைகளுக்கு படுத்துவதை தடுப்பதற்காக இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உறுதியாக தெரிவித்துள்ளது.

manithan


 



Post a Comment

Previous Post Next Post