ரியாஸின் "இரைதேடும் பறவைகள்" விமர்சனம்

ரியாஸின் "இரைதேடும் பறவைகள்" விமர்சனம்


பல  சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களுக்கு இடையே வெளியாகியிருக்கும் "இரைதேடும் பறவைகள்"  மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.  ரியாஸின் உணர்வுபூர்வமான வரிகளில் 
ரியாஸின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலை ஷமீல்ஜெ இசை அமைத்து பாடியுள்ளார்.  

குடும்ப சூழ்நிலையின் காரணமாக வெளிநாடுகளுக்கு தொழில் புரியச் செல்லும் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்ற துயரங்களை சினிமாத்தனம் இல்லாமல் வெளிப்படுத்துகின்ற நடிப்பு ,அதற்கு மெருகூட்டும் இசை ,சமீலின் குரலில் வெளிப்படுகின்ற துயரம்,மற்றும் காட்சி அமைப்புக்கள் என்று உச்சத்தை தொடுகின்றது இந்தப் பாடல்.

மேலும் ரியாஸ் அசல் நடிப்புடன் பொருந்துகிறார். தொனி மற்றும் ரியாசின் பாடல் வரிகளில் ஏக்கம் மற்றும் சோகம் சேர்க்கப்பட்டுள்ளது,  சமீலின் இசையும் ,மென்மையான ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் குரலும் மேலும் இந்தப் பாடலை மெருகூட்டியிருக்கின்றது.

மனைவியின் கதாபாத்திரத்தில் Pearlija JeyaRajah தன் கணவனின் பிரிவை நினைத்து வாடும்  காட்சியில் உணர்ச்சிகளை அட்டகாசமாகக் கடத்தியிருக்கிறார்.

நண்பன் கதாபாத்திரத்தில்  நஸீர் குறைவான நேரமென்றாலும் உணர்வுபூர்வமான இடங்களில் நடிப்பில்  ஜொலித்திருக்கிறார் .

பாடலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடிப்பவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

எடிட்டிங் ,மற்றும்  ஒளிப்பதிவு அற்புதம்.

சொல்ல வந்த கருத்தை அணுகிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது.


VRating:
5/5




 



Post a Comment

Previous Post Next Post