Ticker

6/recent/ticker-posts

Ad Code

UK Election Results 2024 : பிரிட்டன் தேர்தல் - பிரதமர் பதவியை இழக்கிறார் ரிஷி சுனக்!


பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலின் முடிவில் 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சிக்கு முடிவுக்கு வந்து, தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடிக்கிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நிலையில், பிரிட்டன் தனது முதல் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. சுமார் 4 கோடியே 65 லட்சம் பிரிட்டன் மக்கள் வாக்களிக்கும் இந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.

கன்சர்வேடிவ் கட்சி சார்பில், இந்தியா வம்சாவளியான ரிஷி சுனக்கிற்கும் தொழிலாளர் கட்சியின் சார்பில் கீர் ஸ்டார்மர் ஆகியோரில் யார் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

பிரிட்டன் தேர்தல் நேற்று காலை தொடங்கி நாடு முழுவதும் 40,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

650 உறுப்பினர்களை கொண்ட மக்களவைக்கான தேர்தலில் மொத்தம் உள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், இடதுசாரியான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 23 இடங்களில் முன்னிலை வகித்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர் கட்சி 150 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக் நாளை காலை தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18



 



Post a Comment

0 Comments