அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கு சூடு - பதறவைக்கும் காட்சிகள்-VIDEO

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கு சூடு - பதறவைக்கும் காட்சிகள்-VIDEO


அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், காதில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அந்நாட்டின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் என்ற இடத்தில், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப், பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து டிரம்பை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காதில் காயம் அடைந்த டிரம்ப், உடனடியாக “மைக் STAND” பின்புறம் பாதுகாப்பாக குனிந்தார்.

உடனடியாக, டிரம்ப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் அவரது வலது காதில் காயம் ஏற்பட்ட நிலையில், ரத்தம் முகத்தில் வழிய டிரம்ப் ஆக்ரோஷமாக முழங்கினார்.

இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். மேலும் துப்பாக்கியால் சுட்டவரையும் அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். காதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

மேலும் இதுகுறித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர், நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை. என்ன நடந்தது என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், முன்னாள் அதிபர் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை என்பதால் நாம் அனைவரும் நிம்மதியாகலாம். மேலும் நமது அரசியலில் நாகரீகம் மற்றும் மரியாதைக்கு நம்மை மீண்டும் ஒப்புக்கொள்ள இந்த தருணத்தைப் பயன்படுத்த வேண்டும். அவர் விரைவில் குணமடைய நானும் மிசேலும் வாழ்த்துகிறோம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தற்போதைய அதிபர் ஜோ பைடனும், பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு விளக்கப்பட்டது.

அவர் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறார் என்பதைக் கேட்டதறிந்தேன். மேலும் தகவல் வரும்வரை, ​​அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும், பேரணியில் இருந்த அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதற்காக ஜில் மற்றும் நானும் இரகசிய சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. அதைக் கண்டிக்க ஒரே தேசமாக நாம் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

news18



 



Post a Comment

Previous Post Next Post