திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-151

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-151


குறள் 320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

யாருக்காவது நாம கெடுதல் செஞ்சோமுன்னா, அது நமக்குத் தான் திரும்பி வரும். நாம நிம்மதியா வாழணும்னா அடுத்தவொ யாருக்கும் கெடுதல் செய்யாம இருக்கணும். 

குறள் 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

அடுத்த உயிர்களை சாவடிக்காம இருக்கது நல்ல அறமான செயல். சாவடிச்சா, அது  நமக்கு எல்லா கெடுதலையும் கொடுக்கும். 

குறள் 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

தாங்கிட்ட இருக்கதை, மத்தொவொளுக்கு கொடுத்து எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனைய்க்க நல்ல மனசு இருக்கே..அது தான் எல்லா நல்ல கொணத்துலயும் பெரிசு. 

குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

எந்த உசுரையும் கொல்லக் கூடாதுங்குற கொள்கை தான் இருக்கதுலயே நல்ல அறவழி. 

குறள் 325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

இந்த ஒலக வாழ்க்கைக்கு பயப்பட்டு சந்நியாசியா போறவொளைவிட, கொலை செய்ய பயப்பட்டு அடுத்த உசுருங்களை கொல்லாம இருக்கவொ தான் ஒசத்தி.

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post