கடைசி 18 பந்தில் 5 ரன்கள்.. சிரிப்பு வந்தவுடன் ஷாக் கொடுத்த இலங்கை அணியின் கேப்டன் – நடந்தது என்ன?

கடைசி 18 பந்தில் 5 ரன்கள்.. சிரிப்பு வந்தவுடன் ஷாக் கொடுத்த இலங்கை அணியின் கேப்டன் – நடந்தது என்ன?


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கொழும்பு நகரில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்தது. 

பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ரோகித் சர்மாவின் அதிரடியான துவக்கம் காரணமாக அசத்தலாக ஆட்டத்தை துவங்கியிருந்தது. இருப்பினும் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சற்று தடுமாறும் தடுமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது ஷிவம் துபே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் நிச்சயம் இந்திய அணி வெற்றிபெறும் வெற்றி பெற்றே விடும் என்ற நிலை இருந்தது. குறிப்பாக கடைசி மூன்று ஓவர்களுக்கு இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருந்தது. இருப்பினும் கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்ததால் போட்டியில் பதட்டம் தொற்றியது. 

அவ்வேளையில் 48-வது ஓவரின் போது இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா வீசிய மூன்றாவது பந்தில் ஷிவம் துபே பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அப்போது டக்அவுட்டில் அமர்ந்திருந்த கம்பீர், கோலி ஆகியோர் சிரித்தபடி ஷிவம் தூபேவின் அந்த பவுண்டியை கொண்டாடினர். ஆனால் அதற்கு அடுத்த பந்தில் ஷிவம் துபே அசலங்கா பந்தில் ஆட்டம் இழக்க 14 பந்துகளுக்கு 1 ரன் தேவை என்கிற நிலை இருந்தது.

அவ்வேளையில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சந்தித்த முதல் பந்திலயே அசலங்கா பந்துவீச்சில் ஆட்டம் இழந்ததால் போட்டி சமனில் முடிந்தது. இந்த போட்டியில் சூப்பர் ஓவர் கிடையாது என்பதால் போட்டி சமன் என்று அறிவிக்கப்பட்டு முடிவுக்கு வந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றி உறுதி என்று அனைவரும் புன்னகைத்த வேளையில் அடுத்த இரண்டு பந்துகளிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணியின் கேப்டன் இந்திய அணிக்கு ஷாக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்ரீலங்கா அணி 101 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்த பின்னரும் அந்த அணியின் இளம் வீரரான வெல்லாலகேவின் சிறப்பான ஆட்டம் காரணமாக அந்த அணி 230 ரன்கள் குவித்து போட்டியை சமன் செய்தது. இதன் காரணமாக வெல்லாலகேவிற்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post