நெஞ்சுச் சளியை கரைக்க உதவும் 8 எளிய வீட்டு வைத்தியங்கள்!

நெஞ்சுச் சளியை கரைக்க உதவும் 8 எளிய வீட்டு வைத்தியங்கள்!


நெஞ்சுச் சளி என்பது பருவகால மாற்றங்கள், தொற்று நோய்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவற்றால் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இது பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. நெஞ்சுச் சளி அதிகமாக இருப்பது நம்மை பெரிதளவில் சிரமப்படுத்தும். இருமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.‌ மருத்துவ சிகிச்சைகளுடன் பல எளிய வீட்டு வைத்தியங்கள் மூலமாக நெஞ்சுச் சளியை குறைக்கலாம். இந்தப் பதிவில் நெஞ்சுச் சளியைக் கரைக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

வெந்நீரில் தேன் கலந்து குடிப்பது நெஞ்சுச் சளியை கரைக்க உதவும் மிகவும் பயனுள்ள வழியாகும். தேன் இயற்கையான ஆன்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொண்டை வலியைக் குறைத்து இருமலை சரி செய்யும். 

எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலவையானது நெஞ்சுச் சளியை அகற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சை, வைட்டமின் சி நிறைந்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இத்துடன் தேனை சேர்த்து கலந்து குடிப்பது நெஞ்சுச் சளியில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, மார்பு வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. 

வெந்நீரில் மூன்று துளி பெப்பர்மென்ட் ஆயில் சேர்த்து ஆவி பிடித்தால், மார்பில் பிடித்திருக்கும் சளி எளிதாகக் கரையும்.‌  ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை நீராவி பிடித்தால் நல்ல மாற்றம் தெரியும். 

இஞ்சி இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நெஞ்சுச் சளியை கரைத்து இருமலை சரி செய்யும். இஞ்சியை அரைத்து குடிப்பது நெஞ்சு வலியையும் குறைக்கும்.‌ 

பூண்டின் இயற்கையான ஆன்டிபயாட்டிக் பண்பு நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவும். நீங்கள் சாப்பிடும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வதால் நெஞ்சுச் சளி குறையும்.‌

துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீர் போல குடிப்பதும் நெஞ்சுச் சளிக்கு நல்ல பலனளிக்கும். 

கருவேப்பிலை இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், இது நெஞ்சுச் சளியை கரைத்து இருமலை சரி செய்யும். கருவேப்பிலையை நேரடியாகவோ அல்லது உணவில் சேர்த்தோ சாப்பிடுவது, சளி சார்ந்த பிரச்சினைகளை சரி செய்ய உதவும். 

இதுதவிர தினசரி போதுமான அளவு தண்ணீர் குடித்தால், சளி நீர்த்துப் போகச் செய்து விரைவில் வெளியேற உதவும். இத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நன்றாக ஓய்வு எடுங்கள். இது நெஞ்சுச் சளி பாதிப்பில் இருந்து விரைவாக குணமடைய உதவும். 

மேற்கண்ட வீட்டு வைத்தியங்கள் நெஞ்சுச் சளியை குறைக்க உதவும் என்றாலும், எந்த ஒரு வீட்டு வைத்தியத்தையும் பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. சிலருக்கு இந்த வீட்டு வைத்திய முறைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மேலும், நெஞ்சுச் சளி நீண்ட நாட்கள் நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

kalkionline


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post