Ticker

6/recent/ticker-posts

Ad Code



கடைசி 9 போட்டியில் ஒரு வெற்றி கூட இல்லை.. எந்த காரணமும் சொல்ல மாட்டேன்.. கதறிய பாகிஸ்தான் கேப்டன்!


ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த நிலையில், பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 565 ரன்களை குவித்தது. இதனால் 117 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, வங்கதேச அணிக்கு 30 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை எளிதாக எட்டி வங்கதேசம் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் பேசுகையில், நிச்சயமாக சாக்கு சொல்ல மாட்டேன். இந்த பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை போல் அமையவில்லை. கடந்த 9 நாட்களாக இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் மழை பெய்து வந்தது. அதனால் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது. 450 ரன்களை எடுத்த பின் டிக்ளேர் செய்ததற்கான காரணம், வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தான்.

அதேபோல் பவுலிங்கிலும் வங்கதேச அணியை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதேபோல் டிராவுக்காக விளையாடும் போது, சிறுபிள்ளைத்தனமான விஷயங்கள் நடக்கும். அழுத்தமான சூழல்களில் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது. இந்த போட்டியில் செய்த தவறுகளை வரும் நாட்களில் சரி செய்வோம். எந்த பிட்சாக இருந்தாலும் ஸ்பின்னருக்கான இடம் அணியில் உள்ளது.

ஆமிர் ஜமாலால் பேட்டிங், பவுலிங்கில் பங்களித்திருக்க முடியும். அவரை மிஸ் செய்துவிட்டோம். அதேபோல் சிட்னி டெஸ்ட் போட்டியில் சாஜித் கான் சிறப்பாக ஆடினார். அங்கும் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடியது பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த போட்டி எங்களுக்கு மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. எங்கள் நாட்டில் உள்ள பிட்சில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று புரிந்து கொண்டோம். இனி மீண்டும் தவறுகளை செய்யாமல் இருந்தாலே வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

mykhel



 Ai SONGS

 



Post a Comment

0 Comments