Ticker

6/recent/ticker-posts

Ad Code



வேட்டை இதழின் அகவை 8/9-மதுரை பாபாராஜ்

கவிஞரும், எழுத்தாளரும், வானொலிக் கலைஞருமான 
"மதுரை பாபாராஜ்".அவர்களின் வாழ்த்துச்செய்தி

அகவைத்திருநாள் 27.08.24
வேட்டை இதழின் தமிழ்த்தொண்டு எட்டாண்டு
சாதித்தே ஒன்பதாம் ஆண்டில் நுழைகிறது!
மேதினியின் திக்கெட்டும் செய்திகள் மற்றும்  
தனிநபர் ஊக்கமென்றே ஆற்றலுக் கேற்ப
படைப்பிற்கு  வாய்ப்புகளைத் தந்தே  வெளியிடும்
தூயதொண்டை வாழ்த்தி வணங்கு

இலக்கியத்தின் மாண்புகள் தற்காலப் பாக்கள்
படைப்பாளி பாடல்கள் மற்றுமிங்கே செய்தி
வழங்குகின்ற முத்தமிழ் ஏடாகப் போற்றும்
உலக இதழென்றே வாழ்த்து

செயற்கைத் தொழில்நுட்ப நுண்ணறிவைக் கொண்டே
முயற்சிகள் சேர்ந்தே ,ஒற்றுமை கொண்ட அருமைக்
குழுவினரும் தோள்கொடுக்கும் பாங்கினை வாழ்த்து!
வளர்தமிழ்போல் வாழ்கபல்லாண்டு.

மதுரை பாபாராஜ்


 Ai SONGS

 



Post a Comment

0 Comments