Ticker

6/recent/ticker-posts

Ad Code



வாழ்த்திடுவோம் வேட்டையை!-கவிஞர் ஆர்.எஸ்.கலா

கவிஞரும், எழுத்தாளருமான,ஆர்.எஸ்.கலா அவர்களின் வாழ்த்துச்செய்தி!


வேட்டை வேட்டை
விடியலைக் காட்டும் வேட்டை.
காட்டைக் கடந்து 
நாட்டை ஆளும் வேட்டை

கடலோடு போட்டியிட்டு
அலையாய் எழுத்தாடும் வேட்டை.
கடக்கிறது  ஒம்பதாவது ஆண்டை 

சேட்டை இல்லாத இதழ் 
சாட்டையாய்ச் 
சொற்கள் சுமந்திடும் வேட்டை

தலைக்கனம் இல்லாது
இலக்கணம் புரளும் வேட்டை.
தனக்கென ஓர் இடத்தை 
வளைத்துப் போட்ட வேட்டை

மெருகூட்டலில் மிரட்டுதே வேட்டை.
வெரும் புள்ளியையும் 
உருட்டி உலாவுது வேட்டை

ஒன்பதாவது  ஆண்டிலும் புதுமை
புகுத்திடத் தயாராகிடும் வேட்டை
வாழ்த்திடுவோம் போட்டு
நாமும் எந்நாளும்  பாட்டை

ஆர்.எஸ்.கலா

 Ai SONGS

 



Post a Comment

0 Comments