ஐக்கிய மக்கள் கூட்டணி அங்குரார்ப்பணம்; எட்டுக் கட்சிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

ஐக்கிய மக்கள் கூட்டணி அங்குரார்ப்பணம்; எட்டுக் கட்சிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள  கூட்டணியில் எட்டு முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. 

அதற்கமைய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, சுதந்திர மக்கள் காங்கிரஸ், சுதந்திர மக்கள் காங்கிரஸ், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,  பிரஜைகள் குரல் மக்கள் இயக்கம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, முற்போக்கு தமிழரசு கட்சி,திவிதென ரணவிரு அமைப்பு, அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் ஆகியவற்றின் பிரதானிகள் இக்கூட்டணியின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 

கட்சியின் தேர்தல் நடவடிக்கை பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்கவினால் கூட்டணியின் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

ஊழல் மோசடிகளை அடியோடு வேரறுப் பதற்கான பலம் வாய்ந்த சட்டக்கட்டமைப்பு, ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக வலுவான சட்டம், கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுதல், வலுவான சர்வதேச தொடர்புகள், பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகள், எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுதல், சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட யோசனைகள் ஐக்கிய மக்கள் கூட்டணி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 




 



Post a Comment

Previous Post Next Post