Ticker

6/recent/ticker-posts

Ad Code



செல்போன் டவருக்குப் பதிலாக செயற்கைகோள் மூலம் கைப்பேசிகளை இயக்கும் சோதனையில் சீனா வெற்றி


செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கைகோள் மூலமாக விவேகக் கைப்பேசிகளை இயக்கும் சோதனையில் சீனா வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளது. 

இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016-ஆம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது.

இந்தச் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தரையில் கைப்பேசிகளைக் கோபுரங்கள் இல்லாமல் கைத்தொலைப்பேசிகளில் பேசலாம் என்று கூறப்படுகிறது. 

கைத்தொலைப்பேசிகள் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் தொலைப்பேசி செயற்கைக்கோள்கள் வழியாகவே விவேகக் கைப்பேசிகளில் பேச முடியும்.

தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments