Ticker

6/recent/ticker-posts

Ad Code



விமானம் தண்ணீருக்குள் விழுந்தது: 7 பேர் மரணம்


மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸ் (Honduras) கரைக்கு அருகே விமானம் ஒன்று தண்ணீருக்குள் விழுந்ததில் 7 பேர் மாண்டனர். 10 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Lanhsa ஏர்லைன்ஸ் விமானம் ஹொண்டுராஸின் ராவ்தான் தீவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நீருக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

லா செய்பா (La Ceiba) நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் 17 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.

அவர்களில் சிப்பந்திகளும் அமெரிக்கர் ஒருவரும், பிரான்ஸ் நாட்டவர் ஒருவரும், 2 பிள்ளைகளும் இருந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் கூறின.

nambikkai

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments