மத்திய கிழக்கில் பரவும் போர்ப் பதற்றம்

மத்திய கிழக்கில் பரவும் போர்ப் பதற்றம்


இஸ்ரேலுக்கு,  ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் எச்சரிக்கைகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை மத்திய கிழக்கில் பிராந்திய போராக அதிகரிக்க்கும் அபாயம் உருவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானிய தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்து நாட்டின் முக்கிய உளவுத்துறை நிறுவனங்களான மொசாட் மற்றும் ஷின் பெட் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.

இந்த சந்திப்பில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காரண்ட் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தளபதி ஹெல்சி ஹலேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், மத்திய கிழக்கு பிராந்திய நிலவரம் மற்றும் போரை தடுக்க தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.



 



Post a Comment

Previous Post Next Post