Ticker

6/recent/ticker-posts

Ad Code



வீட்டுக்குள் களவாடச் சென்ற ஆடவர்... புத்தகம் படித்ததால் பிடிபட்டார்


வீட்டுக்குள் களவாடச் சென்ற ஆடவரின் கவனம் புத்தகம் படிப்பதில் திரும்பியதால் அவர் பிடிபட்ட சம்பவம் நடந்துள்ளது.

இத்தாலிய ஊடகங்கள் அந்தத் தகவலை வெளியிட்டன.

ரோமில் உள்ள வீட்டு மாடத்தின் வழி 38 வயது ஆடவர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்திருக்கிறார்.

வீட்டில் உள்ள பொருள்களைத் திருடுவது அவரது நோக்கம்.

ஆனால் மேசையில் கிடந்த Homer's Iliad எனும் கிரேக்கப் புராண புத்தகத்தைக் கண்டு அவர் மதி மயங்கினார்.

வந்த வேலையை விட்டுவிட்டு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார்.

எழுந்து வந்த 71 வயது வீட்டு உரிமையாளர் ஆடவரைக் கண்டார். ஆடவர் உடனே வீட்டு மாடத்தின் வழி தப்பிக்க முயற்சி செய்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக BBC தெரிவித்தது.

தெரிந்தவரைக் காண வந்திருந்ததாக அவர் காவல்துறையிடம் கூறினார்.

மற்றொரு வீட்டிலிருந்து திருடியதாகச் சந்தேகிக்கப்படும் விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்ட பையுடன் ஆடவர் பிடிபட்டார்.

இந்நிலையில் ஆடவர் படித்த புத்தகத்தை எழுதியவர், அவருக்கு ஒரு புத்தகத்தைத் தர விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.

seithi


 Ai SONGS

 



Post a Comment

0 Comments