ரணில் VS மஹிந்த: முந்திக் கொண்ட ரணில், வெல்லப் போவது யார் ?

ரணில் VS மஹிந்த: முந்திக் கொண்ட ரணில், வெல்லப் போவது யார் ?


ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி போடுவதற்கு பல வகையிலும்  பல விதங்களிலும் பலரும் முயற்சிகள் செய்த போதிலும், இலங்கையின் அரசியல் யாப்பு அதற்கான வாய்ப்புகளை அளிக்கவில்லை.

ஏற்கனவே சூடு பிடித்திருந்த ஜனாதிபதித் தேர்தல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மேலும் சூடு பிடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முதல் இலங்கை தேர்தல் ஆணையம் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தி, வெற்றி பெற்றவரை ஜனாதிபதியாக வர்த்தமானி மூலம் அறிவிப்புச் செய்வதன் வழியாக பதவியில் உள்ள ஜனாதிபதி அதிகாரத்தை இழப்பார். இதுவே இலங்கையின் ஜனாதிபதி சம்பந்தமாக அரசியல் யாப்பு கூறும் வழிமுறையாகும்.

இந்த அடிப்படையில் தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரையில் 10 வேட்பாளர்கள் கட்டுப் பணத்தை செலுத்திய  போதிலும், போட்டி நிலவுவது நான்கு கட்சிகளிடையே ஆகும்.

அதிலும் இம்முறை இரண்டு அல்லது மூன்று கட்சிகளில் மாத்திரமே போட்டி காணப்படுகிறது.

இந்த வகையில் இம்முறை NPP,SJP,போன்றவை தனித்துப் போட்டியிட்டாலும், UNP,SLPP போன்றவை தேர்தலில் கூட்டினைந்து போட்டியிட வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதற்காக இரு கட்சிகளிடையே நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போதிலும் எந்தவிதமான முடிவையும் எட்ட முடியவில்லை.
இரு கட்சிகளின் பொது வேட்பாளர்களராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் போட்டியிடுவார் என  ஏகமானதாக முடிவு செய்யப்பட்டாலும், அதிகார பகிர்வு சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டே வந்தது.

அரசியல் வட்டாரங்களின் தகவல் படி இறுதியில், SLPP 50% சதவீதமான அதிக பகிர்வுகளை வேண்டி நிற்க, மற்றும் 15 அமைச்சர்கள் பிரதம மந்திரி பதவி தமது கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என்ற விடாப்பிடியின் காரணமாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் SLPP,UNP இரு கட்சிகளும் கூட்டிணைத்து தேர்தலில் போட்டியிட வேண்டிய நிர்பந்திக்கப்பட்ட நிலையில்,  ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பனத்தை செலுத்துவதன் மூலம் இவ்விடயத்தில்  சூட்சகமாக முந்திக் கொண்டார். 

தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு கட்டுப்பணத்தை செலுத்தும் தினத்தை அறிவித்த முதல் நாளே ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சுயேச்சை வேட்பாளராக கட்டுப் பணத்தை செலுத்தினார்.

தற்போது SLPP யை பொறுத்தவரையில் தனித்து நின்று போட்டியிட முடியாத நிலையில், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு SLPP தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொறுத்தவரையில், ஒரு வித்தியாசமான அரசியல் தந்திரங்கள் நிறைந்த ஒருவராகவே காணப்படுகின்றார். அதிலும் கட்சிகளையும் அமைப்புக்களையும் துண்டு துண்டங்களாக உடைப்பதில் விசேட திறமையை கொண்டவர்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவுகள் செய்யப்பட்ட போதிலும், சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணத்தை செலுத்தியதன் மூலம் SLPP யை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டது.

இன்லையில் அதிகாரம்,  அமைச்சுப் பதவி வழங்கினாலும் வழங்காவிட்டாலும் ரணில் விக்கிரமசிங் அவர்களின் சயேற்சை குழுவுடன்  இணைய வேண்டிய இறுதியான ஒரு நிலைக்கு SLPP தள்ளப்பட்டுள்ளது.

இது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கைக்கொண்ட ஒரு மிகப் பலமான அரசியல் தந்திரமும் அரசியல் காய் நகர்த்தலுமாகும். 

இதிலும் விஷடமாக தங்களது சொந்தக் கட்சியான UNPஇல் கட்டுப் பணத்தை செலுத்தாமல் சுயேற்சை வேட்பாளராக கட்டு பணம் செலுத்தியதின் மர்மம், பிரதான கட்சியான SLPP தன்னுடன் இணைவதற்கு கதவுகள் திறந்தே உள்ளன என்ற ஒரு சமிக்கையோடு இவர் மேற்கொண்ட ஒரு வெற்றியான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டி உள்ளது.
ரணில் விக்கிரமசிங் அவர்கள் UNP இல் பணத்தை செலுத்தி இருந்தால்,  பிரதான அரசியல் கட்சியான SLPP தங்களது சின்னத்தை புறந்தள்ளிவிட்டு UNP உடன்  இணைவதில் சிக்கல்கள், கட்சியின் ஏனைய  பிரதான உறுப்பினர்களின் எதிர்ப்புக்களை சந்தித்திருக்கலாம். இவ்வாறான சிக்கல்கள் கட்சியுள்ளும் ஏற்படாதவாறு இவர் மேற்கொண்ட முயற்சி, வெற்றி பெறும் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.

எனவே தற்போதைய அரசியல் களத்தில் நிலவும் போட்டிகளை ஆய்வு செய்யும் போது ரணில் விக்கிரமசிங் அவர்களின் முடிவு SLPP  யினருக்கு கசப்பே ஆயினும் SLPPயினர் ஏற்றுக்கொண்டு கூட்டினையைத்தான் வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதைத்தான் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் சேர்ந்து போட்டியிடாவிட்டால் மரணங்களும் ஏற்படலாம் என்ற ஒரு மறைவான கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதன் படி SLPP யினருக்கு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வைத்த பொறியில் விரும்பியோ விரும்பாமலோ SLLP யின‌ர் சிக்கித்தான்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இம்முறை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட ரணில் விக்கிரமசிங் அவர்கள் வைத்த பொறியில் சிக்க வேண்டிய நிலைமையில் SLPPயினர்.

ரணில் VS மஹிந்த வெல்லப் போவது யார் பொறுத்திருந்து பார்ப்போம்.

பேருவளை ஹில்மி 



 



Post a Comment

Previous Post Next Post