ராஜகுமாரியின் சுயம்வரம்-51

ராஜகுமாரியின் சுயம்வரம்-51


மகாராணி போன பிறகே மருத்துவர் குமரேசன் அறைக்குத் திரும்பினான்.

அவனைக் கண்ட பணிப் பெண்கள் மகாராணி வருகை தந்தமையைக் கூறினார்கள்.  

"அப்படியா? ஏதும் என்னிடம் கூறுமாறு கூறினார்களா?" என்று கேட்டான் குமரேசன்.

உடனே பானு 

"இல்லை இல்லை அவர்கள் வருகை தந்ததை அறிவிக்குமாறு கூறிச் சென்றார்கள்."என்று பதில் கொடுத்தாள் .

"ஓ அப்படியா?  சரி ராஜகுமாரி பற்றி நலம் விசாரித்தார்களா? பேசிப் பார்த்தார்களா? இவங்க தாயிடம் எப்படி? நடந்து கொண்டார்கள்? "என்று கேள்விகளை அடிக்கி விட்டான்.

பானு மீனா இருவரும் சற்று மௌனம் காத்து விட்டுக் கூறினார்கள் 
"மாறி மாறி அங்கு நடந்த அனைத்தையும்  ஓகோ சரி சரி இனி நான் பேசிக் கொள்கின்றேன்" என்று சொல்லி விட்டு ராஜகுமாரியைப் பார்த்தான்.

முத்துக்களோடு தான் இருந்தார் தரம் பிரித்தவாறே அவனுக்கு நம்பிக்கை வந்து விட்டது. தன்னோட வைத்தியம் ராஜகுமாரியைக் குணமாக்கி விடும் என்பதில் தெளிவாகவும் முடிவும் பண்ணி விட்டான்.  ராஜகுமாரிக்கு பாணம் அருந்தக் கொடுக்குமாறு கூறினான். தனக்கும் தாகமெனச் சொல்லிக் கொண்டான் ஒரு அரை மணி நேரத்தில் அவனை மதிய உணவுக்காக அழைத்துப் போக பணி ஆள் வந்து நின்றான். பணிப் பெண்கள் இருவரும் அறையிலே கொண்டு வந்து வைத்தார்கள்.

உணவைப் பார்த்த ராஜகுமாரி தனக்கும் தரும் படி கேட்டார். ஆச்சரியத்தோடு கொடுத்தார்கள். அவர் எப்போதும் விரும்பி உண்ணும் மச்சைக் காய்கறிகளையே எடுத்தார்.

"அடடா என்ன ஒரு அதிசயம் பானு பாருடி நம்ம ராஜகுமாரியை" என்றாள்.

"மீனா ஆமாம்டி அதைத்தான் பார்த்தேன். சந்தோசமாக இருக்கு."

பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டு ராஜகுமாரியைச் சுத்தம் செய்து உடை மாற்றி விட்டார்கள். அப்போது மருத்துவரோடு யாரோ பேசிக் கொண்டு வருவது காதில் விழவே மீனா எழுத்து கதவோரம் போனாள்.

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post