திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-159

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-159


குறள் 412
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

கேக்க ஒண்ணுமில்லாம காதைப் பட்டினியாப்   போடுத நேரம், வயித்துக்கு கொஞ்சமாவது சாப்பாடு கொடுக்கணும். 

குறள் 413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

பெரிய பெரிய அறிஞர்கள் சொல்லுததை கேட்டு நெறைய தெரிஞ்சுகிடுதவங்க இந்த ஒலகத்துல வாழ்றவங்க தான். அவங்க வேள்வித் தீயில் போடப்படும்  சாமான்களை உணவாக ஏற்றுக் கொள்ளும் தேவர்களுக்கு சமமானவர்கள். 

குறள் 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

எப்பாடு பட்டாவது நல்லவைகளைக் கேட்டு தெரிஞ்சுக் கிடணும். அது எல்லா வகையிலும் நமக்கு நல்ல பெருமையைத் தரும். 

குறள் 417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

எதையுமே நல்ல நுணுக்கமா அலசிப்பார்க்கும் கேள்வி ஞானம் உள்ளவங்க, எதைப்பத்தியாவது தப்பா ஒணர்ந்திருந்தாக் கூட அறிவில்லாத முறையில் பேச மாட்டாங்க. 

குறள் 420.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

காதுல விழுகிற நல்ல நல்ல சங்கதிகளைப் பத்திய நன்மையை ஒணராம,  வாய்க்கு ருசியா சாப்பிட மட்டும் விரும்புதவன் இருந்தா என்ன இல்லாட்டா தான் என்ன. 

(தொடரும்)




 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post