வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-7

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-7

வள்ளுவரின் காலம்

'ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரவே காலுங் கரி"
எனும் குறளில் இந்திரனைப் பற்றிக் குறிப்பிடுகிறார் 

வள்ளுவர். இந்திரன் எனும் வானத்தில் உள்ள தேவர்களின் தலைவனைப் பற்றிய இராமாயணத்தில் காணப்படுவதாகும். மேலும், 'நாமரைக் கண்ணான்', "அடியனந்தான்' போன்ற பெயர்களை வள்ளுவர் பயன்படுத்துவதால் பாரதக் கதையும் திருக்குறளுக்கு முன்பே தோன்றியவை என்பது நன்கு விளங்குகிறது. இக்குறள்களைப் பற்றி நாம் இந்நூலின் பிற்பகுதியில் மிக மிக ஆழமாகவும், ஒரு அதிரடியாகவும் ஆராய உள்ளோம் என்பதைத் தெரிவிக்கின்றேன். இந்த நூல் எழுதுகின்ற நோக்கமே. திருக்குறள் பற்றி பல ஆச்சரியமான, அதிரடியான செய்திகளை உண்மைகளை விளக்குவதுதான் என்பதையும் தெரிவித்து, அந்தகைய திருக்குறள் ஆராய்ச்சியைத் தொடங்கும் முன்னர் வள்ளுவரின் திருவுருவப்பட வரலாறையும், அவரது நிலையையும், அவரது வாழ்க்கையையும் ஆராய்ந்து எடுத்துக் கூற வேண்டும் என்ற அவாவினால், வாழும் திருக்குறள் ஆராய்ச்சிக்கு முன்பாக திருவள்ளுவரைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து ஆராய்ந்து இந்நூலில் குறிப்பிட எண்ணியதன் காரணமாக இந்நூல் அமைகிறது என்பதையும் தெரிவிக்கின்றேன். 

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை நாம் அறிந்துகொள்ள. முதலாவதாக, இளங்கோவடிகளால் இயற்றப்பெற்ற ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தையும், அவரோடு வாழ்ந்த, அதே காலத்தினர் மதுரை கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் அருளிய மணிமேகலையையும் நாம் எடுத்துக் கொள்வோம் 

திருக்குறளில் வரும் செய்திகளை இளங்கோவடிகள், தமது காப்பியத்தில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். சான்றாக,"பிறர்க்கின்னா முற்பகல் செய்யிற் தமக்கின்னா பிற்பகற நாமே வரும்"எனும் திருக்குறளை. இளங்கோவடிகள், தமது சிலப்பதிகாரத்தில், 
வஞ்சின மாலையில் முதற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றிய காண்"என்று கையாண்டிருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம். 

மேலும் அவர்"தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழைஎனும் திருக்குறளை, கட்டுரைக் காதையில் "தெய்வந் தொதழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணமால்"என குறிப்பிடுகிறார்

மேலும், வள்ளுவர் காலத்தில் வாழ்ந்தவரும் வள்ளுவரின் தமக்கையார் என்று பலரால் சொல்லப் படுபவருமான ஒளவையார் அருளிச் செய்த "அவ்வாதமாந்தர்கி கறங் கூற்றம்" எனும் மூதுரைப் பாட்டை,இளங்கோவடிகள் தமது சிலப்பதிகாரத்தின் வழக்குரைக் காதையில் "அல்லவை செய்தார்க் கறங் கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றோ"என்றும் ஒளவையாரின் கொன்றை வேந்தப் பாடலான "பேதமை என்பது மாதர்க்கணிகலம்" எனும் கருத்தினைத் தனது சிலப்பதிகாரத்தில், வஞ்சின மாலையில் "பெண்ணறி வென்பது பேதைமைத்தேயென்றுரைத்த நுண்ணறிவினோர் நேக்க நோக்காதே"எனவும் இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். 

இதேபோல இளங்கோவடிகள் காலத்தாரான மதுரை கூலவாணிகள் சித்தலைச் சாத்தனாரும்"தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பொய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்"என்று திருக்குறளைக் கையாண்டுள்ளார். இந்தச் செய்திகளில் இருந்து நாம் நன்கு அறிந்து கொள்வது என்னவென்றால், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளுக்கும், மணிமேகலையை இயற்றிய மதுரை கூலவாணிகளார் சீத்தலைச் சாத்தனாருக்கும் முற்பட்டவரே திருவள்ளுவர் என்பது நமக்கு விளங்குகிறது. எனவே, திருவள்ளுவர் காலம் எது என்று அறிந்துகொள்ள, முதலில் இளங்கோவடிகளின் காலத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post