இந்த நேரத்தில் பாபர் அசாமுக்கு விராட் கோலி இதை செய்யனும்.. பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை

இந்த நேரத்தில் பாபர் அசாமுக்கு விராட் கோலி இதை செய்யனும்.. பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை


வங்கதேசத்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஒரு தொடரில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக ஒரு தொடரில் பாகிஸ்தான் அவமான தோல்வியை சந்தித்தது.

அத்துடன் சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. சமீப காலங்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் தோற்றது. அதன் உச்சமாக தற்போது சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் தோற்றுள்ள பாகிஸ்தான் பெரிய வீழ்ச்சியை வந்துள்ளது.

இந்த தோல்விக்கு பாபர் அசாம் மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய 16 இன்னிங்சில் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். 

அந்த வரிசையில் இத்தொடரிலும் சுமாராக விளையாடிய அவர் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் பாபர் அசாமுக்கு இந்தியாவின் விராட் கோலி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கின்றனர். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய விராட் கோலி இந்திய அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று உச்சகட்ட விமர்சனங்களை சந்தித்தார்.

அப்போது “இதுவும் கடந்து போகும். வலுவுடன் இருங்கள் விராட் கோலி” என்று பாபர் அசாம் ட்விட்டரில் பதிவிட்டு ஆதரவு கொடுத்தார். அதற்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார். அந்தப் பதிவுக்குப்பின் விரைவிலேயே விராட் கோலி சதமடித்து ஃபார்முக்கு திரும்பினார். அதே போல தற்போது சுமாரான ஃபார்மில் தவிக்கும் பாபர் அசாமுக்கு ட்விட்டரில் விராட் கோலி ஆதரவு கொடுக்க வேண்டுமென பாகிஸ்தான் ரசிகர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

பாகிஸ்தான் ரசிகர்களின் இந்த கோரிக்கைக்கு விராட் கோலி செவி சாய்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்ததால் பாகிஸ்தான் அணியில் சில அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் வாரியத் தலைவர் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டில் கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.

crictamil


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post