பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவிருக்கும் ஆஸ்திரேலியா

பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவிருக்கும் ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக்கீழ் உள்ள இளம் பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவிருக்கிறது.

அந்தச் சட்டம் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறினார்.

சமூகத் தளங்களின் தாக்கம் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்று அவர் சொன்னார்.

Facebook, Instagram, TikTok ஆகிய தளங்களைப் பயன்படுத்தப் பிள்ளைகள் குறைந்தது 14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டிருக்கவேண்டும் என்றார் அவர்.

குறிப்பிட்ட வயது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

அதற்கான வயது சரிபார்ப்புச் சோதனை வரும் மாதங்களில் நடத்தப்படும்.

பிள்ளைகள் திறன்பேசிகளைப் பயன்படுத்தாமல் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காண விரும்புவதாகச் சொன்னார் பிரதமர் அல்பனீசி.

seithi


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post