எடையை குறைத்து ஸ்லிம் & ஃபிட் ஆக மாற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இதற்கு உதவக்கூடிய சில பானங்களை இன்றைய பதிவில் காணலாம். ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த இந்த பானங்கள் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றன. ஆனால் இந்த பானங்களை மட்டுமே குடித்து உடல் எடையை குறைப்பது சாத்தியமல்ல. இதனுடன் தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறையையும் கடைபிடிக்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்து சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்கலாம். இதனுடன் உங்கள் இலக்கை அடைய உதவும் சில பானங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை தண்ணீர்
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். மேலும் எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ச்சத்து அதிகப்படியான பசி உணர்வை கட்டுப்படுத்தி உங்களை நிறைவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C செல்களில் ஏற்படும் சேதத்தை தடுக்கின்றன. ஒரு கிளாஸ் தண்ணீரில், பாதி எலுமிச்சையின் சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
க்ரீன் டீ
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் எடையை குறைக்கவும் உதவும். இதற்கு கிரீன் டீ பவுடர் அல்லது கிரீன் டீ பேக்கை பயன்படுத்தி டீ தயாரித்து குடிக்கலாம்.
இஞ்சி டீ
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இஞ்சி செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதற்கு ஒரு சிறிய துண்டு இஞ்சியை துருவி அல்லது பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, துருவிய இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து இந்த டீயை வடிகட்டி குடிக்கலாம்.
இலவங்கப்பட்டை டீ
இது கொழுப்பை எரிக்க சிறந்தது. இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் சர்க்கரை நோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டையை சேர்த்து 3-5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும். சூடு குறைந்தபின் வடிகட்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து வெதுவெதுப்பாக குடிக்கலாம்.
சோம்பு டீ
இது எடை இழப்புக்கு உதவுவதோடு மட்டுமின்றி மலச்சிக்கலில் இருந்தும் விடுபட உதவுகிறது. சோம்பு டீ தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டிய பின் வெதுவெதுப்பாக குடிக்கலாம். இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் உதவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே.
herzindagi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments