சியா விதைகள் இதயத்திற்கு ஆரோக்கியம் வழங்கும் உணவுகளில் முக்கியானது. இதில் நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல சத்துக்கள் உள்ளதால், இதனை ஒரு சூப்பர்ஃபுட் எனலாம். சியா விதைகளை வழக்கமாக எடுத்துக் கொள்வது, இதயம் மற்றும் எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் பருமனை குறைக்கவும் (Weight Loss Tips) மிகவும் உதவியாக இருக்கும்.
ஆனால் இதற்கு சியா விதைகளை சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம். நீங்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் பலன்கள் கிடைக்கும். சியா விதைகளின் அதிக பட்ச பலனைப் பெற அதனை எப்போது சாப்பிடுவது சிறந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
சியா விதைகளை சாப்பிட சிறந்த நேரம் காலை நேரம். இவற்றை உங்கள் காலை உணவில் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும். சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது என்பதால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, இதன் மூலம் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வும் இருக்கும். இதன் மூலம் உடல் பருமனையும் குறைக்க முடியும்.
உடற்பயிற்சிக்கு முன் சியா விதைகளை சாப்பிடலாமா?
உங்கள் உடற்பயிற்சியை செய்யும் முன் நீங்கள் சியா விதைகளை சாப்பிடலாம். ஏனெனில் இதில் புரதம் அதிகம் உள்ளது. இதன் மூலம் தசைகல் வலுவாகும். மேலும் சியா விதைகள் செயல்திறனை அதிகரிக்கும். இதில் அத்தியாவசிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, இதில் புரதம் உள்ளது. இதனுடன் உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.
உடல் பயிற்சிக்குப் பிறகு சியா விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடற்ப்யிற்சிக்கு பிறகு, தசைகள் அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும் சக்தி கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. சியா விதைகளில் புரதம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை தசை வலியைத் தடுக்க உதவுகின்றன
தூங்கும் முன் சியா விதைகளை சாப்பிடலாமா?
சியா விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது மெலடோனின் மற்றும் செரோடோனின் அதிகரிக்கிறது. எனவே, தூக்கமின்மை பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள், இரவில் தூங்குவதற்கு முன் சியா விதைகளை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சியா விதைகளை சாப்பிடும் சரியான முறை
சாப்பிடுவதற்கு முன், சியா விதைகளை தண்ணீரில் அல்லது பாலில் குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும். இது விதைகள், அளவில் பெரிதாவதோடு, ஜெல் போன்ற அமைப்பாக மாறுகிறது. இது செரிமானத்தை எளிதாக்குகிறது. உலர் சியா விதைகளை ஊற வைக்காமல் அப்படியே சாப்பிடுவது பலனளிக்காது. அதோடு அஜீரண பிரச்சனை உண்டாகலாம். வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் சியா நீர் குடிப்பதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவு தானாகவே கட்டுக்குள் வர ஆரம்பிக்கும்.
zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments