விண்வெளியில் நடக்கும் முயற்சியில் வரலாறு படைத்த SpaceX

விண்வெளியில் நடக்கும் முயற்சியில் வரலாறு படைத்த SpaceX


SpaceX நிறுவனம் விண்வெளியில் நடக்கும் முயற்சியை வெற்றிகரமாக வழிநடத்தியது.

அந்த முயற்சியை வெற்றிகரமாக முடித்த முதல் தனியார் நிறுவனமும் அதுவே.

பூமியிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் SpaceX விண்கலத்திலிருந்து இருவர் வெளியேறினர்.

ஒருவர் செல்வந்தர் ஜேரட் ஐஸாக்மான் (Jared Isaacman)..இன்னொருவர் SpaceX பொறியாளர் சாரா கிலிஸ் (Sarah Gillis).

அவர்கள் விண்வெளியில் நடப்பதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்குத் தயாராவதற்குக் கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் மொத்தம் சுமார் 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

4 பேர் அடங்கிய குழு இருந்த விண்கலம் செவ்வாய்க்கிழமை (7 செப்டம்பர்) விண்வெளிக்குள் பாய்ச்சப்பட்டது.

குழு பூமியிலிருந்து 1,400 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்தது

கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் மேற்கொண்ட ஆகத் தூரமான விண்வெளிப் பயணம் அதுவே.

seithi



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post