
Vietjet விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்று மிரட்டியதாக நம்பப்படும் பெண் பேங்காக்கின் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
அந்தப் பெண் போலந்தைச் சேர்ந்தவர் என்று Vietnam News தெரிவித்தது.
நேற்று செப்டம்பர் 26-ஆம் தேதி வியட்நாமின் டானாங் நகரிலிருந்து பேங்காக் சென்றுகொண்டிருந்த விமானத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்துப் பிற்பகல் 2.18 மணியளவில் தகவல் கிடைத்ததாக சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையம் தெரிவித்தது.
பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளையும் பயணப் பெட்டிகளையும் சோதித்துப் பார்த்தனர்.
வெடிப்பொருள் நிபுணர் குழு விமானத்தைச் சோதித்தது.
அவற்றில் சந்தேகத்துக்குரிய பொருள்களோ வெடிகுண்டுகளோ தென்படவில்லை.
பிற்பகல் சுமார் 4.30 மணிக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக Vietnam News தெரிவித்தது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments