ரூ.1.58 கோடி நிலுவை... நோட்டீஸ் அனுப்பிய வெளிநாட்டு ஹோட்டல்.. பாஜக கூட்டணி முதல்வரால் பறந்த இந்திய மானம்!

ரூ.1.58 கோடி நிலுவை... நோட்டீஸ் அனுப்பிய வெளிநாட்டு ஹோட்டல்.. பாஜக கூட்டணி முதல்வரால் பறந்த இந்திய மானம்!

மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த சூழலில் வெளிநாடு ஒன்றில் ஹோட்டல் அறையில் தங்கி விட்டு கோடிக்கணக்கான பணத்தை கட்டாமல் நிலுவையில் வைத்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த ஜனவரி மாதம் உலகப் பொருளாதார மன்றம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு இந்தியா சார்பில் பல மாநில முதலமைச்சர்கள், ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துக் கொள்வர். இதனை முன்னிட்டு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் சுவிட்சர்லாத்துக்கு சென்றுள்ளார். அங்கே பிரபல SKAAH GmbH ஹோட்டலில் தங்கியுள்ளார்.

கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஏக்நாத் ஷிண்டே, அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஹோட்டலில் தங்கயுள்ளனர். இந்த சூழலில் இங்கு தற்போது ரூ.1.58 கோடி நிலுவையில் உள்ளதாக அந்த நிறுவனம், மகாராஷ்டிர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது மொத்த பில்லில் ரூ.3.75 செலுத்திய பிறகும், மீதம் ரூ.1.58 கட்டாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.

இதனால் அந்த நிறுவனம் மகாராஷ்டிர அரசுக்கும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும், உலக பொருளாதார மன்றத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கடந்த 28-ம் தேதி பிரபல செய்தி நிறுவனத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம் (MIDC) தலைவர் வேல்ராசு கூறுகையில், "இந்த நோட்டீஸ் குறித்து எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.

இந்த விவகாரம் தற்போது இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் தங்கி ஹோட்டலுக்கு பில் கட்டாமல் கோடிக்கணக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. வெளிநாடுகளிலும் இந்தியாவின் மானம் கப்பலேறி வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post