உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகள் செய்யப்போவதில்லை என பிரான்ஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 43 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தற்போது லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் போர் மூண்டுள்ளது.
 
இதனால் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அண்டை நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. போர் நிறுத்தம் குறித்து பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோதும், போர் நடத்துவதில் இஸ்ரேல் உறுதியாக நிற்கிறது.

இந்நிலையில் இஸ்ரேல் - காசா போர் குறித்த அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் அறிவித்துள்ளார். மேலும் போர் நிறுத்தத்தை கொண்டு வர மற்ற நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகள் செய்வதை நிறுத்த வேண்டும் என அவர் பேசியுள்ளார்.
 
இதனால் கோபமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “பிரான்ஸ் அதிபர் மெக்ரானும், மற்ற மேற்கத்திய தலைவர்களும் இப்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடை விதிக்க அழைப்பு விடுக்கின்றனர். ஆனால் ஈரான் அதன் பினாமிகள் (ஹெஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள்) மீது என்றாவது ஆயுத தடை விதித்திருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
 
பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் எந்த முரண்பாடுகளும் இல்லாமல் ஒரே அச்சில் நிற்கிறார்கள். ஆனால் பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடுகள் இஸ்ரேல் மீது ஆயுத தடை விதிக்கின்றன. என்ன அவமானம்? எந்த நாடுகளின் ஆதரவு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இஸ்ரேல் இந்த போரில் வெற்றி பெறும்” என பேசியுள்ளார்.

webdunia



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post