குறள் 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
நாம என்ன செய்யணும் நெனைய்க்கோமோ அதை மத்தவொ தெரிஞ்சுகொள்ள முடியாதமாதிரி வச்சிக்கிட்டா, எதிரிங்களால நம்மை ஒண்ணுஞ் செய்யமுடியாது.
குறள் 441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
அறம் பற்றி நல்ல தெரிஞ்சு வச்சிருக்க நம்மை விட மூத்த அறிஞர்களின் நட்பை பெறுவதற்கு என்ன வழிங்கிறதை கண்டு பிடிச்சு அதுபடி நடந்துக்கணும்.
குறள் 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
நமக்கு வந்த தும்பத்தை போக்கணும். இனிமேயும் தும்பம் எதும் நம்மை சீண்டாம இருக்கணும்னா, அதைத் தடுத்து காக்கத் தெரிஞ்ச பெரியவங்களை நமக்கு தொணையா வச்சுக்கிடணும்.
குறள் 446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
தகுதி இருக்க ஆளுங்களோட கூட்டணி வச்சுருக்க வல்லவனை, எந்த எதிரியாலயும் ஒண்ணுஞ் செய்யமுடியாது.
குறள் 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
நல்லவங்களோட தொடர்பை விட்டு விடுறது இருக்கே அது, பல ஆளுங்களோட பகையை சம்பாதிக்கதை விட பல மடங்கு மோசமானது.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments