அரசின் அதிரடி மாற்றங்கள்-17

அரசின் அதிரடி மாற்றங்கள்-17


மறுபடியும் ஷானி அபேசேகர ?

இலங்கைப் பொலிஸ் திணைக் களத்தில் 'ஷெர்லக் ஹோம்ஸ்' என்று அழைக்கப்படும் கீர்த்திமிகு பொலிஸ் அதிகாரியும், முன்னாள் சீ.ஐ.டி பணிப்பாளருமான ஓய்வு பெற்ற ஷானி அபேசகர மீண்டும் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பொலிஸ் சேவைக்கு அழைக்கப் பட்டிருக்கிறார்.
 
இம்முறை அவருக்கு Criminal intelligence Analysis and Prevention Division பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

சவூதி அரேபிய தூதுவர் சந்திப்பு:

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி அவர்களை ஜனாதிபதியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றி தொடர்பில் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின் வாழ்த்துச் செய்தியை, தூதுவர் அல்கஹ்தானி ஜனாதிபதியிடம் கையளித்தார்.                         
                                                                           
பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் நீண்டகால ஆதரவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு தூதுவர் அல்கதானி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

சவூதி அரேபியாவுக்கான இலங்கை தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இருதரப்பின் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான தேசிய கொள்கையொன்றை வகுக்க அரசாங்கத்தை ஊக்குவித்த சவூதி அரேபிய தூதுவர், சவூதி அரேபிய முதலீடுகளை இந்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு இலங்கையில் சாதகமான சூழலை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கையில் ஏற்கனவே சவுதி அரேபிய முதலீடுகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்றும் தூதுவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும் என தூதுவர் அல்கஹ்தானி குறிப்பிட்டார்.

மேலும், இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும்  அல்கஹ்தானி குறிப்பிட்டார்.

இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெனாண்டோ 202410.10 அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலுக்கு அரச வளங்களைப் பயன்படுத்தாது!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு அரச வளங்களைப் பயன்படுத்தாது, அதனை இம்முறை நடைமுறையில் காட்டுவோம் என NPP உறுப்பினர் லால்காந்த இன்று தெரிவித்துள்ளார்.

"எமது அனைத்து அரசியல் செயற்பாடுகளிலும் தேர்தல் நடவடிக்கைகளிலும் முன்னுதாரணமாக செயற்படுவோம். அரச வளங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த மாட்டோம். அதனை இம்முறை நடைமுறையில் காட்டுவோம்" என கண்டி மாவட்ட வேட்புமனுவை சமர்ப்பித்த பின்னர் கேள்வி லால்காந்த தெரிவித்தார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு:

இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹியை ஜனாதிபதி சந்தித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய எனக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த அஸீஸ் ஹி, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்து, பாகிஸ்தான் ஜனாதிபதி அஸீப் அலி சர்தாரியின் விசேட வாழ்த்துச் செய்தியையும்  கையளித்தார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் “இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருங்கிய உறவை நான் பெரிதும் பாராட்டுகிறேன். ஜனநாயகம், பன்மைத்துவம், சட்டத்தின் ஆட்சி, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் எமது ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன். இது நம் இரு நாடுகளுக்கும் நல்ல நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று பாகிஸ்தான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடியதுடன், பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தானின் ஆதரவு இலங்கைக்கு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது, மருத்துவக் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதுடன், எதிர்காலத்தில் விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான வாய்ப்புகள் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கிராமிய வறுமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையின் கால்நடைத் துறையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வலுவான உறவு இந்தச் சந்திப்பில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

முனீர் முளப்பர் (நளீமி) கம்பஹா தேர்தல் களத்தில்:

மெளலவி முனீர் முளப்பர்  (நளீமி) பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் சார்பாக கம்பஹா மாவட்டத்தில், அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் போட்டியிடுகிறார். 

2015 ஆண்டில் மக்கள் விடுதலை முன்னனியில் இணைந்து கொண்ட இவர், தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக உள்ளார்.

இவர்  "நாம் மனிதர்" வேலைத்திட்டத்தின் ஊடாக இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டார்.

முஸ்லிம்கள் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதில் பெரும் பங்களிப்பு செய்துள்ள இவர், இன நல்லிணக்கம் சகவாழ்வுக்காகவும், 2015 இனக்கலவரத்திற்கு எதிராகவும் செயல்பட்டவராவார். 

தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் பிரதான பேச்சாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுவரும் இவர், மாத்தறை, மீஎல்ல கிராமத்தில் பிறந்த 44 வயதானவர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான முஸ்லிம்கள், அநுர குமார் திசாநாயக்கவுக்கு வாக்களித்துள்ள பின்னனியில் சுமார் 95 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதன் மூலம், தான் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில் அவர் களம் இறங்கியுள்ளார்.

இதற்கு முன்னர் நடந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஜே.வி.பி. சார்பாக முஸ்லிம் பெண்மணி அம்ஜான் உம்மா போட்டியிட்டார்.

 11,000 ஏக்கர் காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு உத்தரவு 

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு    பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா (Hisham Abu Taha)  ஜனாதிபதியை சந்தித்தார்:

இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா (Hisham Abu Taha) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தேன்

இச்சந்திப்பில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் அபுதாஹா, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதற்காக பலஸ்தீன அரசாங்கத் தினதும் மக்களினதும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பலஸ்தீனத்திற்கு இலங்கை வழங்கும் நீண்டகால ஆதரவைப் பாராட்டிய தூதுவர், பலஸ்தீன் எதிர்நோக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில், இலங்கை பின்பற்றிய நிலையான நடவடிக்கைகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் இலங்கையின் நட்புறவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்தும் பேண பலஸ்தீன் எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் வலியுறுத்தினார்.

பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் விசா பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய தூதுவர் அபுதாஹா, இரு நாடுகளுக்கும் இடையிலான மனிதவள தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்தச் சந்திப்பில், இலங்கைக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நிலவும் வலுவான உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினதும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரியுடனான சந்திப்பு:

ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 2024.10.10ம் திகதி அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லரை, (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet)  ஜனாதிபதி சந்தித்தார்.

இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அட்மிரல் கோஹ்லர், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பாராட்டினார்.

கடற்படைப் பிரிவின் மனிதவள பயிற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் என அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் உறுதியளித்துள்ளார்.
CLICK 👇👇👇
அரசின் அதிரடி மாற்றங்கள்-1
அரசின் அதிரடி மாற்றங்கள்-2
அரசின் அதிரடி மாற்றங்கள்-3
அரசின் அதிரடி மாற்றங்கள்-4
அரசின் அதிரடி மாற்றங்கள்-5



 



Post a Comment

Previous Post Next Post