
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் அலிபாபா குழுமமும் இணைந்து புதிய ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளன.
வருங்காலச் செயற்கை நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகள் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தும் வகையில் அமைய அது உதவும்.
ANGEL எனும் ஆய்வுக்கூடம் 10 அம்சங்களில் கவனம் செலுத்தும். பசுமைத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை ஆகியன அவற்றில் அடங்கும்.
மூத்தோரிடையே முதுமை மறதி போன்ற நோய்களை செயற்கை நுண்ணறிவின் துணையோடு முன்கூட்டியே கண்டறிவதில் ஒரு திட்டம் கவனம் செலுத்துகிறது.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் வழிமுறைகளை அறிய இன்னொரு திட்டம் உதவும்.
200 ஆய்வாளர்களும் பொறியாளர்களும் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுவர்.
தொடக்கவிழாவில் பேசிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) பல்வேறு நிபுணர்கள் கலந்துகொள்வது ஆராய்ச்சியை வளப்படுத்தும் என்றார்.
நிறுவனங்கள் புத்தாக்கப் பாதையில் முன்னணி வகிக்கவும் அது உதவும் என்று அவர் கூறினார்.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments