எமெர்ஜிங் ஆசிய கோப்பை: 20 ரன்ஸ்.. இந்தியாவை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கானிஸ்தான்.. ஃபைனலில் மோதுவது யார்?

எமெர்ஜிங் ஆசிய கோப்பை: 20 ரன்ஸ்.. இந்தியாவை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கானிஸ்தான்.. ஃபைனலில் மோதுவது யார்?

ஓமனில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் திலக் வர்மா தலைமையில் களமிறங்கிய இந்தியா ஏ அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன் அணிகளை தோற்கடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி இந்தியா தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியை எதிர்கொண்டது. 

ஓமனில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் ஏ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு ஜூபைத் அக்பரி மற்றும் செதிகுல்லா அடல் ஆகியோர் ஆரம்பத்திலேயே இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கினார்கள்.

அதற்கேற்றார் போல் இந்திய வீரர்களும் சுமாராக பந்து வீசினார்கள். அதை பயன்படுத்தி பட்டாசாக விளையாடிய அந்த ஜோடி 14.1 ஓவரில் 137 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தனர். அதில் அக்பரி 64 (41) ரன்களும் அடல் 83 (52) ரன்களும் விளாசி அவுட்டானார்கள். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் தம்முடைய பங்கிற்கு வெளுத்து வாங்கிய கரீம் ஜானத் 41 (20) ரன்கள் குவித்தார். 

இறுதியில் முகமது இஸாயக் 12* (7) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ஆப்கானிஸ்தான் ஏ 206-4 ரன்கள் குவித்தது. இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ரசிக் சலாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 205 ரன்களை துரத்திய இந்தியா ஏ அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் அபிஷேக் ஷர்மா 7 (5), பிரப்சிம்ரன் சிங் 19 (13) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர்.

போதாகுறைக்கு மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடிய கேப்டன் திலக் வர்மா 16 (14), ஆயுஷ் படோனி 31 (24) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். இருப்பினும் ரமந்திப் சிங் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். ஆனால் எதிர்ப்புறம் நேஹல் வதேரா 20 (14), நிஷாந்த் சிந்து 23 (13) ரன்களில் போராடி அவுட்டானார்கள்.

அதனால் ரமந்திப் சிங் அதிரடியாக போராடி 64 (34) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் இந்தியா ஏ 186-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் கடந்த முறை ஃபைனல் வரை சென்ற இந்தியா இம்முறை செமி ஃபைனலுடன் வெறும் கையுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. மறுபுறம் இந்தியாவை நாக் அவுட் செய்து ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் ஃபைனலில் இலங்கையை எதிர்கொள்ள தகுதி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அல்லா ஹசன்பர் 2, அப்துல் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post