113 ரன்ஸ்.. 4331 நாட்கள்.. காற்றில் பறந்த இந்தியாவின் 12 வருட கெளரவம்.. நியூஸியிடம் 69 வருட வரலாறு காணாத தோல்வி

113 ரன்ஸ்.. 4331 நாட்கள்.. காற்றில் பறந்த இந்தியாவின் 12 வருட கெளரவம்.. நியூஸியிடம் 69 வருட வரலாறு காணாத தோல்வி

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் இரண்டாவது போட்டி துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் போராடி 259 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ரவீந்திரா 65, கான்வே 76 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சுந்தர் 7 அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்தியா சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் மோசமாக பேட்டிங் செய்து வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு மிட்சேல் சான்ட்னர் அதிகபட்சமாக 7 விக்கெட்களை எடுத்தார்.

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய நியூஸிலாந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 86*, கிளன் பிளிப்ஸ் 48* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வாசிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 359 ரன்களை துரத்திய இந்தியா சுமாராக விளையாடும் முடிந்தளவுக்கு போராடியும் ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77, ஜடேஜா ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா பரிதாபமாக தோற்றது.

இதன் மூலம் டெஸ்ட் 12 வருடங்கள் 4331 நாட்கள் கழித்து இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக 2012ஆ ஆண்டு தோனி தலைமையிலான இந்தியா அணி இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அதன் பின் கடந்த 18 தொடர்களில் தொடர்ந்து வென்று வந்த இந்தியா தற்போது முதல் முறையாக சொந்த மண்ணில் சந்தித்த இந்தியா தலை குனிந்துந்துள்ளது.

குறிப்பாக தரமான சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் சொதப்பிய ரோகித் சர்மா – கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி 12 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வந்த கெளரவ சாதனையை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இது போக 1955 முதல் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதில் வரலாற்றில் ஒருமுறை கூட சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்ததில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் 69 வருடங்கள் காணாத தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post