Ticker

6/recent/ticker-posts

54 வருட மாஸ்டர்ப்ளான்.. பஸ்பால் இங்கிலாந்தை ஓடவிட்ட பாகிஸ்தான்.. 29 வருட சாதனை கம்பேக் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து இரண்டாவது போட்டியில் வீழ்த்திய பாகிஸ்தான் தொடரை சமன் செய்தது. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியை 267 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருட்டியது. அதிகபட்சமாக ஜெமி ஸ்மித் 89 ரன்கள் நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சஜித் கான் 6 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 344 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக சவுத் ஷாக்கீல் 134 ரன்கள் நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ரீகன் அகமது நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் 77 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் இறங்கிய இங்கிலாந்தை மீண்டும் அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் 112 ரன்களுக்கு சுருட்டியது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 33 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நோமன் அலி 6, சஜித் கான் நான்கு விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 36 என்ற எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் ஷான் மசூத் 23*, ஆயுப் 8, சபிக் 5* ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

இதன் மூலம் 2021க்குப்பின் மூன்று வருடங்கள் கழித்து பாகிஸ்தான் சொந்த மண்ணில் 4 தொடர் தோல்விகளுக்குப் பின் ஒரு டெஸ்ட் தொடரை வென்று நிம்மதி பெருமூச்சு விட்டது. மேலும் 2015க்குப்பின் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தான் அசத்தியுள்ளது. அத்துடன் 1995குப்பின் 29 வருடங்கள் கழித்து முதல் போட்டியில் தோற்றும் கடைசியில் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.

அதற்கு கடைசி 2 போட்டிகளில் பாகிஸ்தான் பாபர் அசாம் போன்ற சுமாராக விளையாடிய வீரர்களை நீக்கி சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்ததே முக்கிய காரணமாக அமைந்தது. அதைப் பயன்படுத்தி இந்த தொடரில் 2 அணியின் ஸ்பின்னர்கள் மட்டும் அதிகபட்சமாக 73 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். இதற்கு முன் கடந்த 1969/70ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் நியூசிலாந்து விளையாடிய தொடரில் அதிகபட்சமாக ஸ்பின்னர்கள் 71 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாகும். மறுபுறம் பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாட முயன்ற இங்கிலாந்து முதல் போட்டியில் வென்றும் கடைசியில் பரிதாப தோற்றது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments