Ticker

6/recent/ticker-posts

மருதப்"பா"வரங்கம்-2




3.கைக்குட்டை

"பார்விரும்பும்  
 கைக்குட்டை பாங்கு"

(நேரிசை வெண்பா)

உண்டிடும் வாய்கழுவ ஊர்ந்திடும் நீர்உதட்டில்
கண்டதோர் நீரைக் களைந்திடவே

துண்டித்த

சீர்துணியைப் பேரழகாய் செப்பனிட நம்முறவே
பார்விரும்பும் "கைக்குட்டை"பாங்கு:



4.மிளகு

"முறையில் மிளகொன்றே மேல்"

(குறள்வெண்பா அந்தாதி)

உருவில் சிறிய உயர்வில் அரிய
பெருமையைக் கொண்டதே பேறு

பேறு தகுதியால் பேணியே காத்திடும்
ஊறு தனைப்போக்கும் ஊற்று

ஊற்றாம் அதனை உணவில் கலக்கிடும்
கூற்றது உண்மையில் குன்று

குன்றில் விளைந்து குறுமிள கென்றிட
நன்றே உதவும் நலம்

நலத்தினில் நம்மை நகைத்திட வைக்கும்
நிலத்தோர் விரும்பும் நிறைவு

நிறைவில் மருந்தென நீதியாய் ஓங்கும்
முறையில் "மிளகொன்றே" மேல்:

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments