Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -70


குறள் 1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது
உண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. 

ஏய்! தாமரை! 
அந்த எழிலரசி 
ஆறாவது படிக்கிறா! 
நான் அய்ந்தாவது படிக்கிறேன்! 
என்னோட உயிர்த்தோழிஅவ! 
சரி எங்கிட்டதான் 
அப்படி இருக்குறானு பாத்தேன்! 
ஆனால் அங்கபாரு 
அவளசுத்தி ஆறுபேறு
பேசுபேசுன்னு பேசிக்கிட்டே 
இருக்காங்க! 
அவளும் நட்போட சிரிக்கிறா! 
எல்லாரும் அவளோட நட்பை 
விரும்புறாங்க! 
இப்படி இருக்குறவ கிட்ட 
நான் நட்பை 
விரும்பமாட்டேம்பா!

குறள் 1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை 
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

ஏண்டி வேணி! 
இந்த ராணி ஏண்டி 
இப்படித் தும்மிக்கிட்டே இருக்கா! 
உடல்நிலை சரியில்லையோ என்னவோ!
உன்னுடைய உயிர்த்தோழிதானே 
கேக்கமாட்டியா?
இந்தபாரு, அவஎன்னோட 
காரணமில்லாம 
சண்டபோட்டு 
பேசமாட்டேங்கறா! 
நம்மல கடந்துபோறப்ப 
தும்முறா! 
நீடுவாழ்க என்று 
நான்வாழ்த்துவேனு 
நெனக்கிறா! 
நானா வாழ்த்திப்
பேசுவேன்?

குறள் 1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் 
காட்டிய சூடினீர் என்று.

வாம்மா மங்கம்மா! 
ஏழு நாளக்கி அப்புறமா 
பாக்கவந்திருக்க! 
இல்ல தங்கம்மா! 
எங்க பள்ளிக்கூடத்துல 
ஆறாவதுக்கு சிறப்புத்தேர்வு 
வச்சிட்டாங்க! 
அதான்வரல! 
அதுசரி 
தலயில பூச்சரத்த அடுக்கி 
வச்சிருக்க! 
என்ன கோவப்படுத்த 
அந்த கோகிலத்துக்குக் 
காட்டுறதுக்கு வ
ச்சிட்டு வந்தியாக்கும்! 
இதெல்லாம் நல்லாருந்தா
சரி.

(தொடரும்)




 Ai SONGS

 



Post a Comment

0 Comments