Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-55


குமரன் அமைதியாய்ப் போய்க் குளித்து விட்டு வந்து இரவு உணவு வந்ததும் தானும் போய்ச் சேர்ந்து உண்டான். அவனோடு  பேசிய நண்பர்களோடு பேசி விட்டு வந்து ஏதோ எழுதிக் கொண்டு இருந்தான். அப்போது சும்மா கேலியாய் விளையாடினான் ரவிநாதன். 

"மருத்துவர் என்ன? குமரா அதிகமாய் எழுதுகிறாய் புதிய மருத்துவம் படிக்கின்றாயோ" என்று சிரிப்போடு அதற்குப் பதில் கொடுத்துக் கொண்டே எழுதினான்.

"நான் கவிதை எழுதுகிறேன்  ரவிநாதன் அண்ணா". என்றான் குமரன். 
"அப்படியா கவிதையெல்லாம் எழுதுவாயா?" ரவிநாதன் கேட்டான்.
"ம்ம் ஏதோ சுமாரா எழுதுவேன்" என்றான் குமரன்.
" அப்போ நீ எழுதிய வரிகளைப் படித்துக் காட்டு கேட்போம்" என்றான் ரவிநாதன்.

"ஓ அதற்கு என்ன இதோ படிக்கிறேன்"என்றவன் தான் வரைந்த வரிகளைப் படித்திடத் தொடங்கினான். 

அமைதி என்று ஆரம்பித்தான். உடனே சற்று தள்ளி இருந்த வசந் சொன்னான். 

"என்ன நண்பா இப்போ இந்த இடம் அமைதியாகத் தானே இருக்கு இன்னும் என்னப்பா அமைதி" என்று கூறுகிறாய் என்றான்.

" ஆஹா நல்லாச் சொன்னிங்க போங்க நண்பா நான்அமைதி என்று கூறியது கவிதையின் தலைப்பு அவை அதையே குறித்தேன்"
என்றான் 

"அடடே சரி சரி வாசியும் பா."

அமைதி

அமைதியான 
உள்ளம் எதையும் வெல்லும் .
ஆணவம் கொண்டால் 
உள்ளவையும் தள்ளும்.
உரக்கக் கூறினாலும் 
சிறக்கப் பேசிடவில்லை 
என்றால் கூட்டமும் கலையும்.
புல்லிலும் வல்லமை உண்டாம் 
கல்லிலும் ஈரமுண்டாம்.
குறைத்து எடை போட்டால் 
உமக்குத்தான் ஏமாற்றம்.
இரும்பையும் உருக்கிடும் 
நெருப்பாம்.
அதையும் அணைத்திடும் நீராம் 
ஒன்றை ஒன்று அடித்தும்
அழித்தும் வாழும் உலகம் 
நாம் பிறந்து வாழ்வதும் 
சாவமாம் கூவிச் செல்லும்
சேவலும் உணர்த்திக் 
கொண்ட கதையாம். 
பொல்லாத உலகில் 
சொல்லாலே கொல்லுவது 
மானிட ஜாதியாம். 
எனக் கூறி முடித்தான் கவிதையை. 
எல்லோரும் கை தட்டினர் மூத்த மருத்துவர் முகம் சுழித்தனர்.

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments