Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-163


குறள் 451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

நல்லவங்க  கெட்ட கொணம் உள்ளவங்களோட சேர மாட்டாங்க. ஆனா கெட்ட வங்க அவங்களோட உறவு மாதிரியே நெனச்சு முழுசா ஒட்டிக்கிடுவாங்க. 

குறள் 453
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

ஒருத்தருக்கு ஏற்படுத உணர்ச்சி என்பது அவரோட மனசைப் பொறுத்து இருக்கும். அவரு எப்படிப்பட்டவரு எங்கிறது அவரைச் சுத்தி இருக்க ஆளுங்களை வச்சு சொல்லிறலாம். 

குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

ஒருத்தரோட அறிவு அவரோட மனத்தைப் பொறுத்தமாதிரி தெரிஞ்சாலும், அது அவரு சேர்ந்திருக்கிற கூட்டத்தைப் பொறுத்து தான் இருக்கும். 

குறள் 456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

மனசு தூய்மையா இருந்தாக்கா அவொளுக்கு பொறவு எல்லாமே நல்லாஇருக்கும். சேர்ந்து இருக்க இனம் தூய்மையா இருந்தாக்கா எல்லாம் நல்லதாவே அமையும். 

குறள் 457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மன நலம் நம்ம உயிருக்கு செழிப்பைத் தரும். சமூக நலம் எல்லாப் புகழையும் நமக்குத் தரும். 

(தொடரும்) 



 Ai SONGS

 



Post a Comment

0 Comments