Ticker

6/recent/ticker-posts

30 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் தேவையான 5 சப்ளிமெண்ட்ஸ் பட்டியல்..!

பொதுவாக ஆண்கள் தங்களின் 30 வயதை கடக்கும் போது, ​​அவர்களின் உடல்கள் சில நுட்பமான மாற்றங்களுக்கு உள்ளாக துவங்குகிறது. ஆற்றல் நிலையில் மாற்றங்கள், பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு நேரம் ஆவது, மனநிலை மற்றும் நல்வாழ்வில் ஏற்படும் வேறுபாடுகள் என பல மாற்றங்களை 30 வயதை கடந்த ஆண்கள் அனுபவிக்க நேரிடலாம்.

எனவே 30 வயதை கடந்த ஆண்கள் தங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு சீரான டயட்டை பின்பற்ற வேண்டும். அதே சமயம் சில கூடுதல் உணவுகள் டயட் ஷார்ட்டேஐஸை நிரப்ப உதவும் என்பதை ஒப்பு கொள்வதும் முக்கியம். 30 வயதிற்குப் பிறகு அனைத்து ஆண்களுக்கும் தேவையான 5 சப்ளிமெண்ட்ஸ்கள் என்னவென்பதை இங்கே பார்க்கலாம்.

மெக்னீசியம்: நம் உடலில் 300-க்கும் மேற்பட்ட பயோகெமிக்கல் எதிர்வினைகளுக்கு மெக்னீசியம் முக்கியமானது, இது 30 வயதிற்குப் பிறகு அனைத்து ஆண்களுக்கும் கட்டாயமாக போதுமான அளவு இருக்க வேண்டிய மினரல் ஆகும். இந்த மினரல் தசை செயல்பாட்டை ஆதரிக்க முக்கியமானது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த மெக்னீசியம் உதவுகிறது. அதே போல மெக்னீசியம் குறைபாடானது தசைப்பிடிப்பு, சோர்வு மற்றும் இதய பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் டயட்டில் இலை காய்கறிகள், கீரைகள், நட்ஸ் அல்லது சீட்ஸ் சேர்க்க முடியாவிட்டால் மெக்னீசியம் சேர்ப்பது இடைவெளியை குறைக்க தசை ஆரோக்கியம், ரிலாக்ஸ்சேஷன் மற்றும் சிறந்த ஒட்டுமொத்த மீட்பு செயல்முறையை மேம்படுத்த உதவும்.

ஜிங்க்: டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த ஜிங்க் முக்கியமானதாக உள்ளது. ஆண்களிடையே காணப்படும் இயற்கையான டெஸ்டோஸ்டிரோன் லெவல்ஸ் வயது ஏறஏற குறைய தொடங்கலாம், இது மனநிலை மற்றும் ஆற்றல் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சூழலில் 30 வயத்திற்கு மேற்பட்ட ஆண்கள் ஜிங்க் சப்ளிமென்ட்ஸ் எடுத்து கொள்வது டெஸ்டோஸ்டிரோன் லெவலை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.

பாலியல் ஆரோக்கியம், தசை வளர்ச்சி மற்றும் வலிமைக்கும் முக்கியமானது. பொதுவாக நம் உடல் நிறைய ஜிங்க்-ஐ சேமித்து வைக்காது. எனவே உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் போதுமான அளவு ஜிங்க் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வியர்வை உடலில் இருக்கும் ஜிங்க் லெவலை குறைக்கலாம் என்பதால், உடற்பயிற்சி அல்லது அதி விரம் கொண்ட உடற்பயிற்சிகளை செய்வோருக்கு ஜிங்க் மிகவும் முக்கியமானது.

வைட்டமின் டி: நோயெதிர்ப்பு அமைப்பின் செயல்திறன், மனநிலை கட்டுப்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி அவசியம். 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு வைட்டமின் டி போதுமான அளவு இருப்பதில்லை. குறிப்பாக பெரும்பாலான நேரத்தை வெயிலில் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் செலவழித்தால் வைட்டமின் டி பற்றாக்குறை பொதுவானது. மனச்சோர்வு, எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு முறிவுகள் போன்றவற்றுடன் வைட்டமின் டி பற்றாக்குறை தொடர்புடையது. வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்வது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க மற்றும் சிறந்த நோயெதிர்ப்பு அமைப்பு செயல்திறனை பராமரிக்க, வயதாகும் போது எலும்பு அடர்த்தியை பராமரிக்கவும் உதவும்.

 ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ்: ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் என்பவை அவசியமான கொழுப்புகளாகும், இவை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, அழற்சியை குறைக்கின்றன, அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்பட கூடிய பெரிய உடல்நலக் கவலைகளில் ஒன்று இதய நோய், ஆனால் இது ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்ஸ் எடுத்து கொள்வதால் குறைக்கப்படலாம்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்: வைட்டமின் பி காம்ப்ளக்ஸில் பி6, பி12, நியாசின் மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட பல முக்கியமான பி வைட்டமின்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் உடலில் ஆற்றலை உற்பத்தி செய்ய, மன அழுத்தத்தை சமாளிக்க அவசியம். ஆம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது, மேலும் சோர்வு அறிகுறிகளை குறைக்க கூடும்.

news18




 



Post a Comment

0 Comments