Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-54


மீனா பானுவின் காதில் மெதுவாய்க் கூறினாள் "நமக்கு பரவாயில்லைடி ஒரு கிறுக்கன் சிக்கித்தான் இதை வைத்தே தூக்கம் விழித்திடலாம். "எனக் கூறிச் சிரித்தாள்.
 
"ம் ம் சும்மா இருடி பாவம்" என்று மீனாவை பானு அதட்டி விட்டாள். 

ராஜகுமாரி நெற்றியில் எண்ணெய் டொட் டொட் என்று விழுந்து கொண்டே இருந்தது. மீனா பார்த்துக் கொண்டே இருக்க
பானு  இரவு உணவு உண்டாள்.

மருத்துவர் குமரன் விரைந்து ஏனைய மருத்துவர் இருக்கும் இருப்பிடம் சென்று அடைந்தான். அப்போது அங்கே எல்லோரும் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருக்கக் குமரனும் சென்று புன்னகைத்தான். பதில் புன்னகை எல்லோரும் கொடுத்தாலும் பொறாமை வெளிப்பட்டது.
 
சிலரது முகத்தில் அதைக் கவனித்தும் தெரியாதது போல் தானும் அமர்ந்தான். குமரனை நோக்கி மூத்த மருத்துவர் வினா எழுப்பினார். 
"என்ன பெரும் மருத்துவர் குமரன் அவர்களே நாளையே ராஜகுமாரி எழுந்து ஓடி வந்திடுவார்களோ? "என்று சற்றுக் கேலியான சிரிப்போடு கேட்டார்.  

குமரன் புன்னகை மாறாமலே பதில் கொடுத்தான் "ஆமாம் ஐயா தாங்கள் போய் இருந்தால் மாலைப்பொழுதிலே எழுந்து வந்திருப்பார்கள் நான் போனமையால் சற்று தாமதம் ஆச்சு நான் தங்கள் போல் இல்லையே அனுபவம் புதியவை வைத்தியத்தில் சிறுவன்" என்றான்.

மூத்த மருத்துவர் கடுப்பானார். "என்னையே கேலி செய்யும் அளவு போச்சா ?.உன்னோட தலைக்கனம்" என்று கர்ச்சித்தார் 

ஏனையோர் அவரை சாந்தப் படுத்தினார்கள். "ஐயா குமரன் நம்பர் படி தானே போனார். இதில் அவர் குற்றம் என்ன ஏன் இத்தனை கோபம்" என்று கூறி அமைதிபடுத்திட முயன்றார்கள்.  

அப்போது வெளிப்படையாகவே மூத்த மருத்துவர் கூறினார் "எண் கிடக்கட்டும் ஒரு பக்கம் நான் இங்கே மூத்தவன் அல்லவா. ஒரு மரியாதைக்கு ஐயா நீங்க போக விருப்பினால் முதல் முறை செல்லுங்கள் என்று ஏன் கூறவில்லை எல்லாம் திமிரு  இவர் உண்மையில் வைத்தியரா இல்லை ராஜகுமாரியை நோட்டமிடுபவரா என்று போகப் போகத் தெரியும்" என்றார்.

(தொடரும்)



 



Post a Comment

0 Comments