திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -69

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -69


குறள் 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென் 
றுஅஃதறியும் காதலர் இல்லா வழி

ஏம்ப்பா!
என்நட்புத் தோழி தேன்மொழி 
என்னோட டூவிட்டா! 
ஆனா அவபாட்டுக்குப் 
போறா வர்றா கண்டுக்கவே 
இல்லப்பா! 
அவனால நான் வருத்தப்படறேன்னு 
அவளே நெனக்காம 
இருக்குறா!
அந்த மாதிரிதோழி இல்லாதப்ப 
நான் மட்டும் வருந்துறதுனால 
என்னபயன்? 
சொல்லுங்கப்பா!
ஏம்மா எனக்கெதுக்குமா
இதெல்லாம்!

குறள் 1309
நீரும் நிழலது இனிதே புலவியும் 
வீழுநர் கண்ணே இனிது

ஏய்! கயல்! சித்ரா எப்படி இருக்கா? 
சித்ராவ பத்தி 
ஏங்கிட்ட கேக்கற! 
நீஏழாவது! 
அவ ஆறாவது! 
அவளோட சண்டபோட்டு 
அழவச்சுட்ட! 
இல்லடி! 
நீரும் நிழலை அடுத்திருந்தா குளிர்ச்சியா 
இருக்கும்னு எங்காஅப்பா திருக்குறள்ள 
இருந்து சொன்னாரு! அதுபோல 
நம்மகிட்ட அன்பா இருக்குறவங்ககிட்ட 
டூவிட்டா 
அதுல ஒருமகிழ்ச்சி இருக்குடி! 
அதனாலதான் டூவிட்டேன்! 
சித்ராவர்றா! 
நீயாச்சு அவஆச்சு! 
நான்வரேன்!

குறள் 1310
ஊடல் உணங்க விடுவாரொ(டு) என்நெஞ்சம் 
கூடுவேம் என்பது அவா.

அம்மா
அந்த தமயந்திக்கு என்னாச்சுனு
தெரியல! 
திமானு பேசமாட்டேங்கறா! 
கண்டுக்காம போறா! 
சரிசரி போறானு 
நானும் வந்துட்டேன்! 
ஆனால் என்மனசோ 
தமயந்திகிட்ட போயிபோயி பேசுன்னு 
சொல்லுதும்மா!
அவவந்து 
வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கா! 
மனசுமட்டும் பேசத்தூண்டுதுன்னா 
அதுக்கு ஆசைதானம்மா 
காரணம்!

(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post