வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-62

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-62


315.வினா: ஞாலம் கருதினும் கை கூடும் எப்போது?
விடை: சரியான காலத்தில் முறையாகச் செயல் பட்டால் 
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.(484)

316.வினா: உலகை வெல்ல நினைப்பவர் எப்படி இருப்பர்?
விடை:காலம் கருதி இருப்பர் 
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.(485)

317.வினா:செய்தற்கு அரிய செயலை எப்போது செய்ய வேண்டும்?
விடை:காலம் வாய்க்கும் போது 
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.(489)

318.வினா:வலிமையற்றவரும் வெல்வர் எப்போது?
விடை:இடமறிந்து விழிப்புடன் செயல்பட்டால் 
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.(493)

319.வினா: பெருமை, சிறுமை எப்போது வரும்?
விடை:அவரவர் செயல்களால் வரும் 
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.(505)

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post