Ticker

6/recent/ticker-posts

Ad Code



அரசின் அதிரடி மாற்றங்கள்-9


சுற்றுலா விசா கட்டணம் இரத்து:

39 நாடுகளுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை இரத்து செய்வதற்கான அமைச்சரவை தீர்மானம் மீள அமுல்படுத்தப்படும் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியின் 155வது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக கடமை பொறுப்பேற்பு:

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக அநுரகுமார இன்று  கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதானமாக,
  • கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு விசாலமானது என்பதோடு அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே வறுமை  ஒழிக்கப்படுமா இல்லையா என்பது  தீர்மானமாகும் எனவும் 
  • வினைத்திறன் மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்குவதற்கு அர்ப்பணிக்கும் அரச உத்தியோகஸ்தர்களுக்காக துணைநிற்பதாகவும்
  • சம்பிரதாயமான அரசியல் பழிவாங்கல் இனிமேல் இடம்பெறாது எனவும்
  • இது வரை ஆண்ட தலைவர்கள், ஊடகங்களுக்கு முன்பாக அரச அதிகாரிகளை கேள்வி எழுப்பியது போன்று எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு முன்னால் அரச அதிகாரிகளை கேள்வி கேட்கப் போவதில்லை எனவும், இவ்வாறான ஊடகக் கண்காட்சிகளை தான் ஏற்கவில்லை எனவும்  அரசு ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்து குடிமக்கள் திருப்தியடையும் அரச சேவையை உருவாக்க  எதிர்பார்ப்பதாகவும் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சு அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுக அதிகார சபைத் தலைவர் தளபதி சிறிமேவன்

துறைமுக அதிகார சபையின் தலைவராக முன்னாள் கடற்படைத் தளபதி சிறிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்:

இன்று (2024.10.04) ஜனாதிபதி அலுவலகத்தில் பாதுகாப்பு பிரதானிகளான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர்.
CLICK 👇👇👇

 



Post a Comment

0 Comments