Ticker

6/recent/ticker-posts

Ad Code



சட்டத்தரணி தொழிலுக்குத் திரும்பினார் அலி சப்ரி

அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது சட்டம் சார் தொழிலுக்குத் திரும்பியுள்ளார்.

அலி சப்ரி தனது சட்டத் தொழிலைச் சேர்ந்த குழுவுடன் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், "என்னுடைய இடத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் முக்கிய உறுப்பினரான அலி சப்ரி, தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தேர்வானார்.

அவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரின் முன்னாள் அரசாங்கங்களின் கீழ் நீதி மற்றும் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.

tamilmirror



 



Post a Comment

0 Comments