இந்திய பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அரசின் முக்கிய நடவடிக்கை

இந்திய பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அரசின் முக்கிய நடவடிக்கை

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில்  இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபையில், இந்திய பயணிகள் விமானங்களுக்கு எதிராக தொடரும் வெடிகுண்டு அச்சுறுத்தல்களால்  இலங்கையின் சுற்றுலாத்துறையில்  ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கக் கூடும் எனவும், இது சுற்றுலாத் துறையின் எதிர்காலம் குறித்து கவலையை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம்  இலங்கை வான் எல்லைக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும் அருகிலேயே கட்டுநாயக்க விமான நிலையம் அமைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட அனைத்து விமானங்களும் பாதுகாப்பு சோதனைக்காக திருப்பி விடப்படுகின்றன.

அண்மையில் , வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் தரையிறங்குவதைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இலங்கையின் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு ஏற்பட்டது, ஆனால் இருந்த பணியாளர்களைக் கொண்டு நிலைமையை திறம்பட சமாளிக்க முடியவில்லை.

இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும்,  இதுபோன்ற சம்பவங்களுக்கு மிகவும் திறம்பட பதிலளிப்பதற்கும் கூடுதல் சட்ட அமலாக்கப் பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.




 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post