கல்ஹின்னையிலிருந்து நாடாளுமன்றம் நோக்கிய பயணத்தில்...!

கல்ஹின்னையிலிருந்து நாடாளுமன்றம் நோக்கிய பயணத்தில்...!


கல்ஹின்னையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் இருவர் களமிறங்கியுள்ளனர்.

கல்ஹின்னையில் பிறந்து, பதுளை தர்மதுதா கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கம்பளை சாஹிரா கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்துவிட்டு,  சினிமாத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தடம் பதித்துள்ள அல்ஹாஜ் அவுப் ஹனீபா அவர்களும், அதே கல்ஹின்னையில் பிறந்து அல்மனார் மற்றும் ஸஹிராக் கல்லூரிகளில் பயின்றுவிட்டு, கம்பளையில் வர்த்தகதாதுறையில் ஈடுபட்டுவரும் அல்ஹாஜ் M.S.M. பஸ்மின் அவர்களும் இம்முறை  நாடாளுமன்றம் செல்வதென்பது கல்ஹின்னைக் கிராமத்தவருக்கு மகிழ்ச்சிதரும் ஒரு விடயமாகும்!

தற்போது கம்பளை பஸ்தரிப்பிட வர்த்தக சங்கத்தின் தனாதிகாரியாகவும், ஹல்கொல்லை ஜும்ஆ பள்ளிவாசலின் பொருளாளருமாகவுமுள்ள பஸ்மின் ஹாஜியார் ஒரு சமூக சேவையாளராவார்.

நீண்டகாலமாக தேசிய மக்கள் சக்தியின் பாசறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ள இவர், நாடு அனர்த்த நிலைக்கு வந்தபோது, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்த பல ஆயிரம் பேர்களுள் ஒருவருமாவார். 

இவரது நோக்கிலும், போக்கிலும் நம்பிக்கை கொண்ட கட்சியின் மேலிடம், இம்முறை பொதுத் தேர்தலில் இவரை கண்டி மாவட்ட வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. 

பல ஆண்டுகளாக தேசிய மக்கள் சக்தியில் இணைந்து பணி செய்துவரும் இவர், கட்சியின் கண்டி மாவட்ட முஸ்லிம் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகச் செயல்பட்டு வருகின்றார். 

சஷி விஜேந்திரா என்று பிரபலமாக அறியப்படுபவரான முகமது அவுப் ஹனீபா  1959ல் கல்ஹின்னையில் பிறந்து, 1980 -1990களில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர். 

1983ல்  துபாய் சென்று, 1985ல் இலங்கை திரும்பிய இவர்,  1985ம் ஆண்டு சுனில் சோம பீரிஸ் இயக்கிய "ஓபட திவுரா கியன்னம்" என்ற திரைப்படத்தின் மூலம் இலங்கை சினிமாத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தடம் பதித்துள்ளார். 1985ல் இலங்கையில் இது அதிக வசூல் செய்த திரைப்படமானதால், ஒரே இரவில் நட்சத்திரமானார்.  

அவரது பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்து திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓடியதால்,1992ல், சரசவிய விருதுகளில் மிகவும் பிரபலமான நடிகருக்கான விருதை இவர் வென்றார். 2013ல் இலங்கை இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று,  17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொதுத்தோற்றம் பெற்றார்.1996ல் நடிப்புத்துறையிலிருந்து விலகியுள்ள இவர் தற்போது ஒரு தொழிலதிபராவார். 

இவரும் நீண்டகாலமாக தேசிய மக்கள் சக்தியின் பாசறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளவர்; நாடு அனர்த்த நிலைக்கு வந்தபோது, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்த பல ஆயிரம் பேர்களுள் ஒருவருமாவார். 

இவர்கள் இருவரும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தால், எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கக் கூடிய, அதிக அளவான மக்கள் சேவை செய்கின்ற வலிமை பெறுவர் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமன்றி,  கண்டி - மாத்தளை பிரதேசங்களிலுள்ள குறைபாடுகளை அறிந்து அவற்றுக்கான அபிவிருத்தித் திட்டங்களை வகுத்து, அதிக ஈடுபாட்டுடன் செயல்படக் கூடியவர்கள் என்று அனைவரும் இவர்களை நம்பலாம்!

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post