Ticker

6/recent/ticker-posts

எமெர்ஜிங் ஆசிய கோப்பை: 134 ரன்ஸ்.. ஃபைனலில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்.. வரலாற்று வெற்றி

ஓமனில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. அந்தப் போட்டி அக்டோபர் 27ஆம் தேதி அல் அம்ரெட்டில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற்றது. 

அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 133-7 ரன்கள் மட்டுமே எடுத்தது. சொல்லப்போனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 4.2 ஓவரில் 15-4 என ஆரம்பத்திலேயே இலங்கை தடுமாறியது.

அப்போது லோயர் மிடில் ஆடரில் சிறப்பாக விளையாடிய சகன் அரசிங்கே 64* (47), நிமேஷ் விக்முக்தி 23 ரன்கள் எடுத்து இலங்கையை ஓரளவு காப்பாற்றினர். ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக பிலால் சமி 3, அல்லா கசன்பர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 134 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஜூபைத் அக்பரி கோல்டன் டக் அவுட்டானார். 

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சேதிக்குல்லா அடல் நிதானமாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் தார்விஸ் ரசூலி கொஞ்சம் அதிரடியாக விளையாடி 24 (20) ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்ததாக வந்த கரீம் ஜானத் அதிரடியாக விளையாட முயற்சித்து 3 சிக்சருடன் 33 (27) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இறுதியில் அடுத்ததாக வந்த முகமது இஷாயிக் 16* (6) ரன்களும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய அடல் 55* (55) ரன்களும் எடுத்ததால் 18.1 ஓவரிலேயே ஆப்கானிஸ்தான் ஏ அணி 134-3 ரன்கள் எடுத்தது. அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் 2024 எமர்ஜிங் ஆசிய கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

சொல்லப்போனால் இதன் வாயிலாக முதல் முறையாக எமர்ஜிங் ஆசியக் கோப்பையை வென்றுள்ள ஆப்கானிஸ்தான் ஏ அணி வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது. சமீப காலங்களில் சீனியர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் வெற்றி நடை போட்டு வருகிறது. அதற்கு அடித்தளமாக தற்போது இளம் அணியும் கோப்பையை வென்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழத்தியுள்ளது. மறுபுறம் இலங்கை அணி கடினமாக போராடியும் தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் வெளியேறியது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments