Ticker

6/recent/ticker-posts

வொர்க் அவுட்க்கு முன் 'இந்த' அஞ்சுல ஏதாவது ஒன்று சாப்பிடுங்க.. ஆரோக்கியமா இருப்பீங்க..

நீங்கள் ஆரோக்கியத்துடன் இதனுடன் காலை உடற்பயிற்சியும் மிகவும் அவசியம். இதனுடன் உணவிலும் ஒரு கண் வைத்திருப்பது மிகவும் நல்லது. அப்போதுதான், உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க முடியும். இது தவிர, உடற்பயிற்சிக்கு முன் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் ரொம்பவே முக்கியம்.

அதாவது, காலையில் உடற்பயிற்சிக்கு முந்தைய உணவு கொழுப்புகள் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சீரான அளவு புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும். காரணம், வொர்க் அவுட்க்கு முன் சாப்பிடும் உணவு ஆற்றல் தருவதோடு, சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது.

மேலும், உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடும் உணவு நீங்கள் என்ன பயிற்சி செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்தது. காரணம் சிலர் ஓடுவது, நீந்துவது, சைக்கிள் ஓட்டுவது அல்லது வெறும் வயிற்றில் ஓடுவது... இவை கலோரிகளை எரிப்பதை துரிதப்படுத்துகிறது. எனவே, வொர்க் அவுட்க்கு முன் எந்த மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஓட்ஸ்: இது உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய ஒரு நல்ல உணவாகும். முழு தானியங்களைப் போலவே இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இனிப்பு சுவைக்காக இதனுடன் உலர் பழங்கள், வாழைப்பழம், தேன் சேர்த்து சாப்பிடலாம்.

குயினோவா: இதில் நார்ச்சத்து, புரதம் அதிகமாகவே உள்ளது மற்றும் அதன் கிளைசெமிக் குறியீட்டு அளவும் குறைவாகவே உள்ளது. இவை எடையிலவு மற்றும் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது. எனவே, இதை நீங்கள் உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடுவது நல்லது.

கிரீன் டீ யில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைவாகவும் உள்ளது. இவை கொழுப்பை விரைவாக எரிக்க உதவுகிறது. தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். மேலும் இது நீரிழிவு, இதய் நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. நீங்கள் விரும்பினால் இதனுடன் சில உலர் பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

அவித்த முட்டை: முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகவும் குறிப்பாக முட்டையின் மஞ்சை கருவில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எனவே, ஆற்றலை அதிகரிக்க கோதுமை ரொட்டியுடன் இதை சாப்பிடுங்கள்.

ஸ்மூத்திகள்: இது உங்களுக்கு ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாமல், உடற்பயிற்சி செய்வதற்கான சகிப்புத்தன்மையையும் அதிகரிக்க உதவும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் இது குடிப்பது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பருவகால பழங்கள், காய்கறிகளில் ஸ்மூத்திகள் செய்து குடியுங்கள். இதனுடன் சர்க்கரை சேர்க்க வேண்டாம்.

asianetnews



 



Post a Comment

0 Comments