Ticker

6/recent/ticker-posts

வைர மோதிரத்தைக் குப்பையில் 30 மணி நேரம் தேடிய பெண்

கைகளைக் கழுவ விரலிலிருந்து வைர மோதிரத்தை அகற்றினார்.

மோதிரம் குப்பைத் தொட்டியில் விழுந்தது.

குப்பை...குப்பை நிரப்பும் இடத்துக்குச் சென்றது.

தாய்லந்தின் நாக்கொன் பான்னோம் (Nakhon Phanom) வட்டாரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மோதிரத்தை முழுமையாகக் கைவிட மனமில்லை.

அவர் குப்பை நிரப்பும் இடத்தில் மோதிரத்தைத் தேடச் சிலரை வேலையில் சேர்த்தார்.

கிட்டத்தட்ட 56 காற்பந்துத் திடல்களுக்கு ஈடான 280,000 சதுர மீட்டர் பரப்பளவு இடம்.

மலை போல் குவிந்துக் கிடக்கும் குப்பை.

30 மணி நேரத் தேடல்.

இறுதியில் மோதிரம் கிடைத்ததாக Apitchaya Ning எனும் Tiktok கணக்கில் பகிரப்பட்டது.

2.8 மில்லியன் முறை பார்வையிடப்பட்ட காணொளியில் சிலர் குப்பையை அலசிப் பார்ப்பதைக் காணமுடிகிறது.

குப்பை நிரப்பும் இடத்தில் தேடும் அளவிற்கு மோதிரத்தின் மதிப்பு அதிகமா என்று இணையவாசிகள் பயங்கரமாக யோசித்தனர்.

மோதிரத்தின் மதிப்பு 400,000 பாட் (15,600 சிங்கப்பூர் வெள்ளி). குப்பை நிரப்பும் இடத்தில் மோதிரத்தைத் தேட செலவான தொகையைப் போல் அது 19 மடங்கு என்று Thaiger செய்தி நிறுவனம் சொன்னது.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments