ஒரு மூதாட்டியின் ஆதங்கம்!

ஒரு மூதாட்டியின் ஆதங்கம்!


21வருட சேவைக் காலத்தில் நேற்று ஓர் புதிய அனுபவம். தல்லாடும் வயதில் (70 வயதை தாண்டி) ஒரு பெண் வந்து தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது நான் கேட்டேன் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று. அவரும் வந்திருப்பதாகவும் அவருக்கு நடமாட முடியாது என்றும் அவர் வந்த வாகனத்தில் உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

இது ஒரு வித்தியாசமான அனுபவம் என்பதால் சில கேள்விகளை தொடுத்தேன் பதில் சுவாரசியமாக இருந்தது 
கேள்வி;- நீங்கள் ஏற்கனவே வேறு யாரையாவது திருமணம் செய்துள்ளீர்களா?

பதில்:- இல்லை என்னுடன் வந்திருப்பவர் திருமணம் செய்து பிள்ளைகளும் உள்ளனர். அவரது மனைவி இரந்து விட்டார்.
கேள்வி:- உங்களுக்கு உறவினர்கள் யாரும் இருக்கின்றனரா?

பதில்:- யாரும் இல்லை, அவரையும் பிள்ளைகள் பார்ப்பதில்லை.

கேள்வி:- நீங்கள் இவரை திருமணம் முடிக்க தீர்மானிக்கக் காரணம் என்ன?  

பதில்:- என் வாழ்வில் திருமணம் முடிக்க பல முயற்சிகள் செய்தேன் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதி காலத்தில் ஆவது அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

கேள்வி:- இந்த வயதில் ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

பதில்:- திருமணத்திற்கு வயதும் உடலமைப்பும் தேவையில்லை. உள்ளத்தின் பினைப்பு  தான் தேவை எம் இருவருக்கும் அது இருக்கின்றது. இன்று உடலுக்காகவும் சொத்துக்காகவும் திருமணம் முடிக்கும் போது நாம் ஏன் உள்ளத்துக்காக திருமணம் முடிக்கக் கூடாது.

கேள்வி:- திருமணம் பதிவு செய்யப்பட வேண்டுமா? 

பதில்:- ஆம், அப்போது தான் எம்மில் ஒருவர் மரனித்தால் அடுத்தவருக்கு உரிமை கூற முடியும் இல்லை என்றால்  வேறு யாராவது அந்த உடலுக்கு உரிமை கோருவார்கள்.

கேள்வி:- திருமணத்திற்கு சில நிபந்தனைகள் உள்ளது அவற்றை பூர்த்தி செய்த பின் தான் பதிவு செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? 

பதில்:- ஆம் ஆனால் இப்போது அதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லை இன்றே திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.  

உடனே என் மேலதிகாரியை தொடர்பு கொண்டேன். அவர் சில ஆலோசனைகளை வழங்கினார்

குறிப்பு:- இன்று அதிகரித்து வரும் விவாகரத்துக்களை அவதானிக்கும் போது திருமணத்திற்கு முன்பே  இது போன்றவர்களிடம் இருக்கும் முன்மாதிரிகள் தொடர்பில் கட்டாயம் தெளிவுபடுத்தப்படல் வேண்டும். 

குடும்ப வாழ்வுக்கு உள்ளத்தின் பினைப்பே தேவை என்பதை இந்த மூதாட்டியின் சம்பவம் எனக்கு  உணர்த்தியது.

நன்றி;ரிஷாத் நாபாவல(facebook)

அனுப்பியவர்;தேவிகா சிங்கப்பூர்


 



Post a Comment

Previous Post Next Post